உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(376) ||-

அப்பாத்துரையம் - 10

கப்பல்கள் இன்று கடற்கால் கடந்து மாகடலிலிருந்து மாகடல் செல்ல எட்டுமணிநேரமே பிடிக்கிறது.

பசிபிக் கோடியிலுள்ள பல்போவாத் துறைமுகமும் அட்லாண்டிக் கோடியிலுள்ள கிரிஸ்தோபெல் துறைமுகமும் கடற்கால் திட்டத்தின் பகுதிகளாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இரண்டும், சிறப்பாகக் கிறிஸ்தோபெல் துறைமுகம், உலகின் மாபெருங் கப்பல்கள் பல ஒரே சமயத்தில் தங்கும் தளங்களாகவும், கப்பல்கள் செப்பஞ் செய்யப்படும் பட்டறைகளாகவும் அமையும் படி ஆழ அகலப்படுத்தப்பட்டு, கட்டுமானங்கள், சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கடற்கால் நடைமுறை ஆட்சியின் அரங்கங்கள், அரசியல் ஆட்சி அரங்கம், படைத்துறைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் ஆகியவர்களில் குடியிருப்புக்களும் பணிமாடங்களும் பெரும்பாலும் இந்த இருகோடிகளிலுமே உள்ளன.

கடற்காலின் ஒவ்வொரு பக்கமும் 5 கல் தொலை அளவாக மொத்தம் 10 கல் அகலமுடைய கடற்காற் பகுதி கடற்காலின் தனியாட்சிக்கு உரியது. குடியிருப்புக்கள் இங்கும் பல உண்டு. ஆழ அகலம் பேணும் சீராட்சியரங்கம் (Dredging Division) பூட்டு இயக்கும் பொறித்துறை, அணைசீப்பு அரங்கம் ஆகியவற்றின் பணியாளர்களும் ஆங்காங்கே தத்தம் வினைக்களங்களுக்கு அருகாமையில் குடியிருப்புக் கொண்டுள்ளனர்.