உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100 ||

அப்பாத்துரையம் - 6



தொகையையும், நிப்பொன் கடற் படைக்காக ஐந்து விமானங்கள் கட்டும் செலவுத் தொகையும், நம் கழகத்தின் சார்பாக நன்கொடையளிக்கிறேன்.

இந்தப் போர் எவ்வளவு நீண்டதாகவும் கடுமையாகவும் இருந்தபோதும், நம் பொது எதிரி இறுதியாகத் தோல்வியடையும் வரை நிப்பொனியர்களுடன் தோளோடு தோள் நின்று போரிட உறுதி கொண்டுள்ளோமென்பதை, அவர்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். நிப்பொன் அதன் நேசநாடுகள் ஆகியவைகளின் இறுதி வெற்றியிலும் நம் சொந்தத் தேச விடுதலையிலும் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தோழர்களே! பிற்பகலில் ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்கார் அமைப்பை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

ஜேய் ஹிந்தி!