உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114 ||

அப்பாத்துரையம் - 6



அவ்வறிக்கைக்கு மகிழ்ச்சியுடன் மரியாதை செய்வர்.ஏனென்றால், சுதந்திரத்தின் பெருமை சுதந்திரம் துடிக்கும் மக்களுக்குத்தான் தெரியும்!

உங்களை ஒன்று கேட்கிறேன்; ஒரு சுதந்திர நாட்டில், இராணுவத்தில் சேரவோ யுத்த வரி கொடுக்கவோ, யாரேனும் மறுக்க முடியுமா? முடியவே முடியாது; ஒருகாலும் முடியாது. நம் இந்தியா இன்னும் சுதந்திரமடைய வில்லை; ஆனால் உள்ளத்திலும் உணர்ச்சியிலும் நாம் சுதந்திரமடைந்து விட்டோம். அத்துடன், இங்கு சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரையும் அமைத்து விட்டதால், சுதந்திர மக்களாகவே ஆகிவிட்டோம்.

சட்ட பூர்வமாகச் சொன்னால், யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எந்த நாட்டிலும், தனிச் சொத்துரிமை என்பது எத்தகையத் தனி நபருக்கும் இருக்க முடியாது. யுத்தச் சமயத்தில், மக்களின் சொத்தும் சுகமும் அந்நாட்டு சர்க்காருக்கே உரியன. அதைப் போலவே தான், இங்கு சுதந்திர சர்க்காரை அமைத்து சுதந்திர மக்களாகவே வாழும் உங்கள், உயிர், சொத்து, உடைமை எல்லாம் இப்பொழுது உங்களைச் சார்ந்தவையல்ல. அவையத் தனையும் இன்று இந்தியாவுக்குச் சொந்தம்; வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

இந்த உண்மையையும் உங்கள் கடமையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பீர்களானால், வேறொரு தெளிவான வழியிருக்கிறது. ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி நடத்தியதோடல்லாமல், மன்னர்களைப் போலவும் டாம்பீக வாழ்க்கை நடத்தினர். இன்று அவர்கள் எல்லோரும் இருக்கு மிடம் சிறைச்சாலைதான். உண்மையையும் கடமையையும் மறுப்பவர்கள், தாராளமாக அந்த வழியை பின்பற்றிச் சென்று அவர்களோடு கூடிக் கொஞ்சிக் குலாவலாம். ஆனால் ஒன்று மட்டும் நன்றாக உங்கள் மனதில் பதிந்திருக்கட்டும். யுத்தம் முடிந்தபின், சுதந்திர இந்தியாவில் உங்களுக்கு இடமிருக்காது. அது சமயம் சுதந்திர இந்திய சர்க்கார், ஒருகால் உங்கள் மீது உயர்தரமான இரக்கம் காட்ட விரும்பினால், மூன்றாம் வகுப்பு