உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 115

டிக்கெட்டுடன் உங்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதாகவே இருக்கும்.

மலாய் நாட்டிலுள்ள சில பணக்காரர்கள், அவர்களை நான் தொந்தரவு செய்து கொண்டிருப்பதாக முணுமுணுக் கிறார்களாம். அவர்கள் இனிமேல் உடனடியாக வழியில் இறங்கும் பொருட்டு, அவர்களுடன் நேர்முகமாக நின்று பேச விரும்புகின்றேன். இந்தியச் சுதந்திர இலட்சியத்துக்காக ஏதோ நன்கொடை வழங்குவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்கள் இனத்தையே மாற்றிக்கொண்டு விடலாமெனச் சிலர் யோசனை செய்வதாகவும் ஓர் செய்தி எட்டுகிறது. வேறு சிலர், எதிரி சொத்துப் பாதுகாப்பாளரிடம் தங்கள் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டு, யுத்தம் நின்றதும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்றும் குயுக்தி செய்கின்றனர்களாம். இன்னும் சிலர், ஒரு கோடி ரூபாய் நன்கொடையளிப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பர்மாவுக்குப் போய் விடுவதென்றும், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழையும்வரை வாக்களித்த பணத்தைச் சிறிது சிறிதாகக் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்து, கடைசியாகத் தட்டிக் கழித்து விடுவ தென்றும் நினைத்துக் கொண்டிருப்பதாக மற்றோர் செய்தி வருகிறது. நாம் ஷோனானிலோ, பர்மாவிலோ, அல்லது இந்தியாவிலோ, எங்கிருந்தாலும், இந்தியா பரிபூரண சுதந்திரம் அடைந்து கடைசி வெள்ளையன் தற்காலிக சர்க்கார் ஷோனானிலேதான் இருக்கும்.

ஒவ்வொரு இந்தியரும், எந்த மதத்தினராயினும் சரி, அவரவர் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமென்பதே எனது கோரிக்கை. அதை யார் யார் செய்கிறார்கள்? யார் யார் செய்யவில்லை யென்பது எனக்குத் தெரியும். எந்த விதத்திலும், எத்தகைய தியாகத்தைச் செய்தேம், நான் இந்தியாவை விடுதலை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன்; செய்தே தீருவேன். இந்த மகத்தான பொறுப்பை அது சந்தோஷ மளித்தாலும் அளிக்ககாவிட்டாலும், நீங்கள் உணர்ந்துதானாக வேண்டும். சுதந்திரத்தில் உங்களுக்கு விருப்பமில்லை யென்றால், வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். பிறகு நான் முன் சொன்னபடி, இரண்டாவது வழி வழி உங்களுக்காகத்