உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

அப்பாத்துரையம் - 11

இந்தியாவை வெளி உலகில் பெருமைப்படுத்துவதற்காகப் பாரத வாழ்விலும் இலக்கியத்திலும் புறக்கணிக்கப்பட்டிருந்த புத்தரையும் அசோகச் சக்கரத்தையும் ஏற்று வானளாவப் பிரசாரம் நடக்கிறது. அதே முறையில் அதன் பழம் பெருமையைக் கூறுவதற்காகவே உலகம் போற்றும் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிப் பண்டிதர் நேரு தம் ஏட்டில் பக்கம் பக்கமாக எழுதுகிறார். அந் நாகரிகம் இருக்கு வேத ஆரியருக்குரியதே என்று நாட்ட முற்படும் ஆரிய இனப் பண்டிதர் உண்டு என்பதை அவர் அறிவார். ஆனால், உலகமொப்பிய அறிஞரான அவர் அவ்வாறு கூற விரும்பவில்லை; கூறவில்லை. அது ஆரியருக்கு முற்பட்ட நாகரிகம் என்றே கூறுகிறார். ஆனாலும் அது ஆரியருக்கு முற்பட்ட இந்து நாகரிகம் என்றே கூறுகிறார், திராவிட நாகரிகம் என்று கூற அவர் ஆரியக் குருதி இடம் தரவில்லை.

-

தென்னாட்டில் முற்போக்கான எண்ணம் - குறைந்தபடி உயர்ந்த ஆங்கிலப்படிப்பு உடைய பலர் தம் பெயரின் பின் உள்ள ஐயர், ஐயங்கார் என்ற பட்டங்களைத் துண்டித்து எழுதுவதையே நாகரிகமாகக் கொண்டுள்ளார்கள். ஆனால், ஜவஹர்லால் நேருவோ இன்னும் பண்டித என்ற அடைமொழியுடனே நாட்டு மக்களிடையே அறிமுகப்படுத்தப்படுகிறார். 'பண்டித’ என்பது தென்னாட்டில் வேறு குலத்தவர் அடைமொழியாகப் பயன்படுத்தப்படினும், அதுவே வடதிசையில் ஐயர், ஐயங்கார் போன்ற ஆரிய முதல் வருண அடைமொழி ஆகும். 'பண்ட்', ‘பண்டா’ என்பவையும் இதன் திரிபுகளே.

'ஆரியமாவது திராவிடமாவது, இன வேறுபாட்டை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் யாராவது கிளப்புவார்களா?' என்று கேட்க வேண்டியவர்கள் பாரத பக்தர்களோ, சனாதனிகளோ, அல்லது மற்ற அகில இந்திய, அகில உலக இயக்கத்தவர்களோ அல்ல, திராவிட இயக்கத்தவர்களே. இனவேற்றுமை பாராட்டாத இனம் திராவிட இனம். மனித இனத்தை ஒரு குடும்பமாக்கி, உலகை ஓருலகாக்கி, ஓருலகடிப்படையில் ஒரு கடவுள் கண்ட இனம் அது. ஆனால், அது குறிக்கொள்ளும் ஓருலகம், ஓரினம் 'ஓநாய்' குறிக்கொள்ளும் ஒருமையல்ல. ஓரினத்தை ஓரினம் விழுங்கி அடிமை கொள்ளும் ஓரின ஒற்றுமையல்ல. இனவரம்பழித்து, உலகை, தேசியத்தை ஓரின