உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




238

அப்பாத்துரையம் - 11

திராவிட இயக்கத் தந்தை பெரியார் கேட்டிருக்க முடியாத கேள்வி இது - திராவிட முன்னேற்றக் கழக ஊழியிலே, திராவிட இயக்க எதிரிகளே கேட்கின்றனர், கேட்டுவிட்டனர்!

தமிழகத்துக்கு மிக மிக நல்ல காலம் பிறந்துவிட்டதென்றே கூற வேண்டும்?

திராவிடம் தனித் தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச்

சொல்லா?

-

ஆகா, ‘மறைமலை' மணம் கமழும் கேள்வி! இக்கேள்வியில் திராவிட இயக்கம் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழக மணமே வீசுகிறது! இதை ஆசிரியர் மறைமலையடிகள் கேட்டிருக் கலாம். அவர் மாணவ சிகாமணிகள் - இல்லையில்லை, சிகா மணிகள் சமஸ்கிருதம் - தலைமணிகள் கேட்டிருக்கலாம்! திராவிட இயக்க ஒளியுடன் ஆசிரியர் மறைமலை அடிகளின் மரபொளியும் கலந்த இணையொளியரான தற்போதைய தி. மு. க. வின் பொதுச் செயலாளர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் கேட்டிருக்கலாம். முன்னாள் பேராசிரியர், இந்நாள் சட்டமன்ற வாணர் க. அன்பழகன் கேட்டிருக்கலாம். இவர் களல்லாவிடில் பேராசிரியப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர், முனைவர் பேராசிரியர் மு. வரதராசனார் அவர்கள் கேட்டிருக் கலாம்!

ஆனால், இவர்கள் எவரும் கேட்கவில்லை. இவர்கள் எல்லாருமே தமிழினத்தை, தமிழின மொழிகளை, தமிழின நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைக்கத் 'தமிழ்' என்ற சொல்லின் போதாமையை - குறைபாட்டை உணர்ந்து, தேயாத பழம் பெருந் தமிழ் என்ற பொருளுடைய ‘திராவிடம்' என்ற சொல்லை வழங்கியுள்ளனர்.

ஆரியருள் ஆரியத்தின் முன் தமிழுக்குப் போராட மார் தட்டி முன்வந்த பெரியார் பரிதிமாற் கலைஞர் தமிழராகியதும், தம் பெயர் சமஸ்கிருதப் பெயராய் இருக்கக்கூடாதென்பதற்காக, சூரிய நாராயண சாஸ்திரியார் என்ற வீறமைந்த பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். அவர் அறிந்து வழங்கிய சொல் ‘திராவிடம்’.