அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
கடமைகள் பேரளவில் ஜெக் மக்கள்மீதே சுமத்தப்பட்டன.
[117
சிறுபான்மையினராகிய ஜெர்மானியருள்ளும் மிகப் பலர் யூதர்கள். ஜெக் மக்களை இழித்துப் பழிப்பதில், யூதருடன் மற்ற ஜெர்மானியர் சேர்ந்துகொண்டனர். ஆனால், மறைமுகமாக ஜெர்மானியர் யூதர்கயுைம் வெறுக்கத் தொடங்கியிருந்தனர்.
ஐன்ஸ்டீன் யூதர்; பிறப்பாலும் மொழியாலும் ஜெர்மானியர். ஆனால், குடியுரிமையால் அவர் ஸ்விட்ஸர்லாந்து நாட்டவராயிருந்தார். இனவேறுபாடு, நாட்டு வேறுபாடு, மொழி வேறுபாடு எதுவும் அவருக்குக் கிடையாது. இந்நிலையல் அவர் வாழ்வு இங்கே மிகவும் இடர்ப் பட்டதாகவே இருந்தது. ஆயினும் இதை அவர் உணர நெடுநாளாயிற்று. ஏனெனில், அவர் ஜெர்மன்மக்கள் எவரையும் பார்க்கவே நேரவில்லை. மாணவரிடையே எல்லாரும் ஜெர்மன் மொழியே பேசினதால், எத்தகைய சிக்கலும் ஏற்படவில்லை.
ஐன்ஸ்டீனின் பெரும்புகழ் அவருக்கு முன்னே பல்கலைக் கழகம் சென்றிருந்ததனால், மாணவர்கள் அவரை ஒரு பேராசிரி யராக மட்டுமன்றி, ஓர் அரும்புகழ்ப் பெரியாராகவும் மதித்துப் பற்றார்வத்துடன் பழகினர்.
ஐன்ஸ்டீனின் தொடர்புறவுக் கோட்பாட்டின் சிறு திற விளக்கம் இதற்குள் அறிவியல் உலகம் எங்கும் ஒப்புக் கொள்ளப் பட்டுவிட்டது.ஆனால், ஐன்ஸ்டீன் அக்கோட்பாட்டின் பொது முறை விளக்கத்தால் இயங்கியலை முழுவதுமே மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் அவருக்குப் பெருத்த இடர்ப் பாடுகள் ஏற்பட்டன. விளக்கத்தை அறிவுலகுக்கு எடுத்துக்கூற உயர்தரக் கணக்கியல் துறையின் அறிவு தேவைப்பட்டது. ஐன்ஸ்டீன் பள்ளிக் காலத்தில் கணக்கியலில் கொண்ட ஆர்வமும் திறமும், ஜூரிச்சில் இயங்கியலில் மிகுதி ஆர்வம் கொண்டதால் தடைப் பட்டுப் போயிற்று. இதைச் சரிசெய்து கொள்ள அவர் இப்போது கணக்கியலில் உயர்தர அறிஞர் உதவியை நாடினார்.
பிரேக் நண்பர்கள்
பிரேக் பல்கலைக் கழகத்திலுள்ள அவர் நண்பர்களில் கணக்கியல் அறிஞர் ஜார்ஜ் பிக்,(George pick) இயங்கியல்