118
அப்பாத்துரையம் - 7
துறையில் அவருடன் உழைத்த நோஹல் (Nohel) என்ற இளைஞர், மாக்ஸ் பிராட் (Mox Bolt)என்ற இள எழுந்தாளர் ஆகியவர்கள் முக்கிய மானவர்கள்.
ஜார்ஜ் பிக் உயர் தரக்
கணக்கியல் துறையில்
ஐன்ஸ்டீனுக்குத் துணைபுரிந்தார். இருவரும் அத்துறை பற்றி வாதிட்டனர். இத் தாலியக் கணக்கியலறிஞர்களான ரிக்கி,21 ஸிவிட்டா22 ஆகியவர்களின் ‘தனிநிலை மீப்பியல்
லேவி
-
கணிப்பு
23
முறையைத் தொடர் புறவுக் கோட்பாட்டில் பயன்படுத்தும்படி அவர் ஐன்ஸ்டீனுக்கு அறிவுரை கூறினார். பிக் வேலும் பல் வேறுவகையில் ஐன்ஸ்டீனுக்கு மனதுக்குகந்த நண்பராயிருந்தார். அவர் ஏர்ன்ஸ்ட் மாக் காலத்தில் வேலை பார்த்ததினால் அவரை நன்கறிந்திருந்தார். அவரிடம் பற்றார்வமிக்கவராகவும் இருந்தார். ஐன்ஸ்டீனும், அவரும் அடிக்கடி அம் முதல்வர் குணநலங்களைப்பற்றியும், கோட்பாடுகள் பற்றியும் பேசி மகிழ்வர். பிக் வில்யாழ் வாசிப்பதிலும் ஈடுபாடுடையவரா யிருந்தார். இருவரும் மாலை வேளையில் இசையில் மகிழ்ந்து களிப்புறுவர்.
நோஹல் ஒரு யூத இளைஞர். அந்நாட்டு யூதர் நிலைகளை அவர் ஐன்ஸ்டீனுக்கு எடுத்துரைத்தார். முனைத்த யூத இயக்கத்தின்(Zionism) தலைவர்கள் யூதர்களுக்கு ஒரு தனித்தாயகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்களில் சிலர் பிரேகிலிருந்தனர்.
ஐன்ஸ்டீன் யூதர்களிடம் கொண்டபற்று, அவர் மனித னப் பற்றின் ஒரு பகுதியே. யூதர் தனிவாழ்வு, தனியியக்கங்களில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டமுடிய வில்லை. அவர்கள் நல் வாழ் விலும் அதற்கு வேண்டிய அளவு ஒற்றுமையிலுமே அவர் கருத்துச் செலுத்தினார். அவர்கள் படை திரட்டையோ, போர் எதிர் போராட்டங்களையோ அவர் விரும்பவில்லை.
மாக்ஸ் பிராட் ஓர் இள எழுத்தாளர். ஐன்ஸ்டீனுடன் நெருங்கிப் பழகி அவர் குணங்குறைகளை அவர் நன்கறிந்து கொண்டிருந்தார். அவர் இயற்றிய ஒரு புனைகதை “டைக்கோ பிராகியின் மீட்பு”(Redemption ofTycno Brage) என்பது.
டைக்கோ பிராகி ஒரு டென்மார்க் நாட்டு வான நூலறிஞர். அவர் வாழ்க்கையின் மாலைப்போதில் மியூனிச்சில்