உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

127

ஆனால், அந்நிலை ஏற்படாதபடி மாமனும் மைத்துனியும் அவரைத்தம் இல்லத்திலேயே உண்ணும்படி அழைத்து அன்பாதரவு காட்டினர். அவரும் அவர்கள் அன்பில் கனிவுற்றுத் தம்மாலியன்றவரை அவர்கள் வீட்டு வேலைகளில் ஊடாடி உதவிசெய்தார். வீட்டு வேலைகளிலும் அவர் இயங்கியலறிவுத்திறம் எதிர்பாராதபடி சில சமயம் பயன்பட்டது.

இச்சமயம் அவர் நண்பர் பிராங்க் ஒருநாள் அவரைப் பார்க்க வந்திருந்தார். ஐன்ஸ்டீன் அவரைத் தன் மாமன் வீட்டுக்கு வந்து விருந்துண்ணும்படி அழைத்தார். பிராங்க் இதை ஏற்க விரும்பவில்லை. போர்க்கால உணவு நிலையைச் சாக்குக்கூறி மறுக்க முற்பட்டார். ஆனால், ஐன்ஸ்டீன் நகைத்திறத்துடனும், குறும் புத் திறத்துடனும் மறுப்பை ஏற்காது வற்புறுத்தினார். "பங்கீட்டளவைவிட எவ்வளவோ மிகுதியாக வைத்திருப்பவர் என் மாமனார். அதில் பங்குகொள்வதன் மூலம் சமூகநீதிக்கு உதவிய பெருமைகூட உங்களுக்குக் கிடைக்கும். ஆகவே தயக்கம் வேண்டாம். வாருங்கள், என்று அவர் பிராங்கை

அழைத்துச்சென்றார்.

>

குடும்பத்துக்கு ஐன்ஸ்டீன் எவ்வளவு உதவியாய் இருந்தார் என்பதைப்பற்றி உணவுமேடையில் எலிஸா அன்புரிமையுடன் கேலி செய்தார். ““ஆல்பெர்ட்டியில் உலகம் போற்றும் அறிவியலறிஞர். ஆனால் அவர் அறிவு இப்போது பெரிதும் எங்களுக்குத் தான் பயன்படுகிறது. இங்கே என்னென்ன மாதிரி உணவெல்லாமோ மருந்து, வெடிமருந்துகளிடையே புட்டிகளிலும், பெட்டிகளிலும் வருகின்றன. எது உணவு, எது மருந்து அல்லது வெடிமருந்து என்று தெரியவில்லை. எதை எப்படித் திறப்பதென்றும் தெரியவில்லை. குடும்பத்தின் இயைபியலறிஞரான ‘ஆல்பெர்ட்டின்' உதவியில்லா விட்டால் அவற்றை எல்லாம் நாங்கள் சரிவரத் திறந்து பயன் படுத்தியிருக்க முடியாது” என்றார்.

இரண்டாவது மனைவி எலிஸா

எலிசா குழந்தைப் பருவத்திலிருந்தே ஐன்ஸ்டீனை ‘ஆல் பெர்ட்டில்' என்றே அழைத்துப் பழகியிருந்தாள். அவர் நாட்டுப்புற மொழியில் அருமையாகக் குறிப்பிடும் சொற்கள் எல்லாவற்றுக்கும் இறுதியில் ஒரு ல்' விகுதி சேர்த்து,