உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

அப்பாத்துரையம் – 7

பாராட்டிதழ் வாசித்தளித்தார். “ஆராய்ச்சியின் அளப்பருங் கடல் களை அறிவாற்றலுடனும் உறுதியுடனும் கடந்துசென்று, அறவியற் புதுநிலங் கண்ட அறிவுலகக் கொலம்பஸ்" என்று ஐன்ஸ்டீனை அப் பாராட்டிதழ் புகழ்ந்தது.

ஐன்ஸ்டீன் மொழித்துறையில் இன்னும் மிகவும் முன்னேறா மலே இருந்தார். ஆங்கில மொழியை இன்னும் அவர் திறம்படக் கையாண்டு பேசமுடியவில்லை. ஆகவே ஐரோப்பாவில் பேசியது போல அமெரிக்காவிலும் அவர் ஜெர்மன் மொழியிலேயே பேசினார். ஐன்ஸ்டீனின் உலக சமரசத்தை உணராத பலர் ன்னும் அவரை ஜெர்மனி சார்பில் வந்த அறிஞரென்றோ, யூதர் சார்பில் வந்த அறிஞரென்றோ வேறுவேறு தப்பெண்ணம் கொள்ள முடிந்தது. அவர் அமைதி இயக்கங் கண்டு கிலிகொண்ட ஓர் அமெரிக்க மாதர் கழகம் அவரை அமெரிக்காவில் இறங்க விடுவது ஆபத்து என்று கூடக் கலகலத்ததாம்! ஆனால், ஐன்ஸ்டீன் எளிய உருவத்தையும் இனிய நடையையும் கண்ட எவரும் இத்தப்பெண்ணங்களை எளிதில் மாற்றிக் கொண்டனர். எந்நாடும் தம்நாடு, எவ்வினமும் தம்மினம் என்று கொள்ளும் அருளாளர் அவர் என்பதை அவர்கள் உணரலாயினர்.

இங்கிலாந்து: நியூட்டன் கல்லறைக்குப் புதிய நியூட்டனின் மாலைசூட்டு

அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி திரும்பும் வழியில் ஐன்ஸ்டீன் இங்கிலாந்தில் சில நாள் தங்கினார். மெய் விளக்க அறிஞரான ஹால்டேன் பெருமகனார்?2 அவரை விருந்தினராக வரவேற்றார். ஐன்ஸ்டீன் வந்த ஆண்டிலே, அதாவது 1921-லேயே, அவர் 'தொடர்புறவின் ஆட்சி’2 என்ற ஒரு நூல் வெளியிட்டிருந்தார். அதில் அவர் "இயற்கையின் ஆட்சியில் மட்டுமன்றி, மனித வாழ்விலும் தொடர்புறவுக் கோட்பாடு பயன்தருவது என்று காட்டியிருந்தார். ஒவ்வொருவரும் தாம் காண்பதே சரி என்று பிடி முரண்டு செய்யவேண்டுவதில்லை. எல்லார் காண்பதும் தொடர் புறவுபட்ட ஒரே உண்மையின் பகுதிகளே!” என்ற சமரச அறிவை அவர் அதில் புகட்டியிருந்தார்.

மன்னர் கல்லூரியில்(Kings College) ஐன்ஸ்டீனுக்கு வரவேற்பளிக்கப் பட்டது. அதன்பின் வெஸ்ட்மின்ஸ்டர்