உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

[149

"ஜெர்மனியின் இன்றைய அரசியலைக் கைப்பற்றியிருக்கும் ஆதிக்கக் குழு ஆட்சி செலுத்தும்வரை, நான் ஜெர்மனியில் வாழ முடியாது. ஏனென்றால் அத்தகைய ஜெர்மனியில் கருத்துரிமை எதுவும் இருக்க இடமில்லை," என்று அவர் நண்பர்களுக்கு இறுதிவிளக்கம் எழுதினார்.

அவர்

முன்பு அவர் ஆராய்ச்சிக் களமாயிருந்த கலைக்கூடத்துக்கு

கடைசிக்கடிதம் அந்தப்

எழுதிய பழைய அறிவுக்கோயிலிலிருந்து அவர் இறுதிவின டை பெற்றுக்

கொள்ளும் கடிதமாய் அமைந்தது.

படிப்படியான மாற்ற ஏமாற்றங்கள்

ஐன்ஸ்டீனையும் புதிய அரசியலையும் எப்படியாவது சமரசப் படுத்தி இணக்கி வைக்க அறிஞர் பிளாங்க் அரும் பாடுபட்டார். ஐன்ஸ்டீனின் அறிவை மட்டுமன்றி நிமிர்ந்த நேர்மைப் பண்பையும் அவர் அறிந்தவர். அறிந்து மதித்தவர். அதே சமயம் காலத்தின் மாறுதலுக்கேற்றபடி சிறிது விட்டுக் கொடுத்தேனும் அடிப்படை நலங்களைக் காக்கவேண்டுமென்று அவர் எண்ணினார். ஜெர்மன் அரசியலுடன் அவர் ஒத்துழைத்ததன் காரணம் அதுவே. ஐன்ஸ்டீனும் அவ்வாறு சிறிதளவு விட்டுக்கொடுத்தால், அது ஐன்ஸ்டீனுக்கும் நல்லது, ஜெர்மனிக்கும் நல்லது என்று அவர் மனமார எண்ணினார்.

இத்தகைய நல்லெண்ணத்துடன் அவர் ஐன்ஸ்டீனுக்காக மட்டும் போராடவில்லை. அறிவியல் துறையில் மட்டுமாவது ஜர்மனியரல்லா- தாரையும் அதன் அரசியலாரின் ஆதரவு பெறாதவர்களையும் கூடியமட்டும் நீடித்து வைத்துக் கொள்ளும் உரிமைக்காக அவர் வாதாடினார்.

சிலசமயம் அவர் பெருமுயற்சிகள் சிறிது வெற்றி பெற்றதாகத் தோற்றின. இது அவர் நன்னம்பிக்கைக்கு ஊக்கம் தருவது போலி ருந்தது. ஆனால், அரசியலார் இணக்கம் அவர்கள் விரும்பிய மாறுதல் திட்டத்தில் ஒரு படியாக மட்டுமே யமைந்தது. திட்டத்தின் தேவைக் கிணங்க, ஒவ்வொரு படியாக அவர்கள் தங்கள் ஆள் ஒழிப்பு வேலையைத் தட்டின்றி நிறைவேற்றிக் கொண்டுதான் போயினர். அவர் ஏமாற்றமும் படிப்படியான ஏமாற்றமாகவே அமைந்தது.