உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

153

கொண்டிருந்தனர். ஐன்ஸ்டீன் தாமும் அப்பல்கலைக் கழகத்தில் சேர மறுத்தார். பேபரையும் அங்கே அனுப்ப மறுத்தார். அப்பல்கலைக் கழகத் தாருக்கு அவர் சிறிது கசப்பான, ஆனால் முற்றிலும் பொருத்தமான அறிவுரை தந்தார். “புதிய பல்கலைக் கழகம் புகழ்நாடி உழைக்கக் காத்திருக்கும் இளைஞரைப் புறக்கணித்துவிட்டுப் புகழ் பெற்ற கிழவர்களை நாடக்கூடாது,' என்று அவர் அப்பல்கலைக் கழகத்தாரிடம் கருத்துரைத்தார்.

""

அனுபவமுதிர்ச்சியற்ற இளைஞரைவிட மலிவான விலைக்கு அனுபவமுதிர்ச்சி பெற்ற புகழ்மிக்க முதியோரை உலகெங்கும் பரப்பிற்று, ஜெர்மன் அரசியல்! அவர்கள் அவதிகண்டு ஐன்ஸ்டீன் மனங்குமுறினார். ஆனால், அச்சமயம் அவரே அகதிகளில் ஒருவராயிருந்தார் எனினும் புதிய ஜெர்மனியின் தொடர்பிலிருந்து விடுபட்டு, வெளியே யிருப்பதில் அவர் பேராறுதல் அடைந்தார்.

அகதிகளின் உதவிக்காக இங்கிலாந்தில் 1933 அக்டோபரில் ஒரு கலைஞர் உதவி இயக்கம்(Academic Assistarce Council)தொடங்கப் பெற்றது. அதற்காகக் கலைத்துறை உதவி மன்றம் ஒன்றும் நிறுவப்பட்டது. அவற்றின் தொடக்கவிழாவில் ஆங்கில நாட்டு இயக்கவியல் அறிஞரான ரூதர் போர்டுப் பெருமகனார்13 தலைமையில் ஐன்ஸ்டீன் ‘அறிவியலும் விடுதலையுரிமையும்" என்ற பொருள்பற்றிப் பேசினார்.

இத் தறுவாயில் ஐன்ஸ்டீன் ஆழ்ந்த நாட்டுப்பற்று அசையா உறுதியுடையதாக விளங்கிற்று. அது ஆங்கில மக்கள் உள்ளங் களிவித்தது. அகதிகள் சார்பில்கூட அவர் ஜெர்மன் நாட்டரசியலை வெளிப்படையாகக் குறை கூற விரும்பவில்லை. "என்னையும் தன் குழந்தையாக நீடித்த காலம் ஆட்கொண்ட நாடு ஜெர்மனி; அதன் செயல் பற்றிய நன்மை தீமைகளை மதிப்பிட்டுத் தீர்ப்பளிக்க என்னால் முடியாது. செயலுதவி தேவைப்படும் இந்நேரத்தில் அங்ஙனம் தீர்ப்புக்கூறுவதும் பொருத்தமன்று,” என்று அவர் அகதிகள் நிலையை மட்டுமே குறிப்பிட்டார்.

இக்கூட்டம் முடிந்தபின், ஐன்ஸ்டீன் ஸதாம்ப்டன் துறை முகத்தில் கப்பலேறி அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்.