உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. மற்றொரு தாக்குதல்

ஒரு நாள் திரு. ராச்செஸ்டர் வெளியே போயிருந்தார். அப்போது யாரோ ஒருவர் அவரை நாடி வந்தார். நான் அவரை ஓர் அறையில் காத்திருக்க வைத்துவிட்டுத் திரு. ராச்செஸ்டர் வந்ததும் செய்தி தெரிவித்தேன்.

“அவர் யாரென்று கேட்டாயா? எங்கிருந்து வந்தாராம்?” என்று அவர் கேட்டார்.

“திரு. மேஸன் என்று பெயர் கூறியதாக நினைவு, ஜமைக்காத் தீவிலுள்ள ஸ்பானிஷ் நகரிலிருந்து வந்திருக்கிறாராம்!" என்றேன்.

நான் இதைக் கூறியவுடன் அவர் முகம் சுண்டிற்று. “ஆ! மேஸனா, மேலை இந்தியத் தீவிலிருந்தா?” என்று கூறி என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார். அத்துடன் “ஜேன்! இப்போது ஒரு பேரிடரில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது?" என்று அங்கலாய்த்தார்.

அவர் கையில்தான் இன்னும் என் கை இருந்தது. அவர் என்னை என் தனிப்பெயரால் 'ஜேன்' என்று அழைத்தார். அதையும் நான் கவனிக்கவில்லை. கவனித்தாலும் அதில் எனக்கு என்ன உணர்ச்சி வந்திருக்குமென்று என்னால் கூறமுடியாது. அப்போதிருந்த என் மனநிலை முற்றும் அவர் கவலையைக் கண்டு கவலை கொண்டு அதில் பங்கு கொள்வதாக மட்டுமே, அவருக்கு ஆறுதல் தரத் துடிப்பதாக மட்டுமே இருந்தது.

'நான் இதில் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?" என்று நான் கேட்டேன்! அன்புடன் ஆதரவுடனும், அவர் என்னைப் பிடித்து இழுத்துத் தம்மருகில் இருத்திக் கொண்டு, “எனக்கு உதவி வேண்டும் போது, நான் உன்னிடம் கட்டாயம் கோருகிறேன். உண்மையைக் கூறுகிறேன். ஜேன், நீ இப்படிக்