13. தாழ்வும் வாழ்வும்
என்னிடம் இப்போது பணம் இல்லை. எண்ணி இருபது வெள்ளிகள்தாம் சில்லரையாக இருந்தன. என் முழுச் செல்வமும் இதுதான். ஆகவே, இதை வண்டிக்கும் வழிக்கும் செலவிட நான் விரும்பவில்லை. அத்துடன் இன்ன இடத்திற்குப் போக வேண்டும். இன்ன வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாத நிலையில் வண்டியில் போய்த்தான் என்ன பயன்? என் சிறுதொகையைச் சிறுகச் சிறுக உணவுக்கு மட்டும் செலவு செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் கால் சென்ற திசையில் கால் கடுக்குமளவுக்கு நடந்தேன்.
பலநாள் நடந்தபின் கால் கடுக்கத் தொடங்கிற்று. உடல் தளர்வுற்றது. அடிக்கடி வழியின் வாய்ப்புக்கேடுகளாலும் அனுபவமின்மையாலும் வேளாவேளைக்கு உணவு நீர் இல்லாமல் தட்டழிந்தேன். குளிப்பு, ஆடைமாற்று எதுவுமே இல்லாதபடியால் படிப்படியாக எனக்கும் நாடோடி களுக்கும் இரந்து திரியும் ஆண்டிகளுக்கும் உள்ள வேற்றுமை அகன்று வந்தது. நாள்தோறும் நான் நடக்கும் தொலை பத்துக் கல்லிலிருந்து படிப்படியாக ஒன்றிரண்டு கல்லாகக் குறைந்தது. வரவரக் காலைத்தூக்க முடியாததாகி விட்டது. ஒருநாள் கை உணவுண்ண எழவில்லை.
-
எங்கே செல்வது எதற்கு என்று தெரியாவிட்டாலும் போய்க்கொண்டே இருக்க எண்ணினேன் ஒருவேளை சாகும்வரை போய்க்கொண்டேதான் இருக்க வேண்டும் என்று கருதினேன். ஏனென்றால் அது தவிர வேறு நான் என்ன செய்ய முடியும்?
பயணம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட நான் வழியில் வரும் ஒரு வண்டியை நிறுத்தச் சொல்லி அதில் ஏறினேன்.வண்டி