உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 15

தொடக்கத்தில் நாடகக்கலை கதை கூறும் கலையிலிருந்தே பிறந்தது என்பதைச் சூத்திரதாரப் பண்பு காட்டுகிறது. தலைமை நடிகர் கதை கூறுபவராகவும் இருந்ததனால்தான் அவர் சில சமயம் நாடகத் தலைவர் அல்லது சூத்திர தாரராகவும், சில சமயம் நடிகராகவும் விளங்கினார். மலையாளச் சாக்கியர் கூத்திலும் தமிழ்ச் சிலப்பதிகாரத்திலும் அவர் கதை கூறுபவர், எல்லாப் பகுதிகளையும் நடிக்கும் ஒரே நடிகர், அரங்கத்தின் நடுநாயக உறுப்பினர் என்ற மூன்று தன்மைகளையும் ஒருங்கே கொண்டவர் ஆகிறார்.

இம் மூன்று பண்புகளையும் இன்றும் கதைக் கச்சேரிகளில் மட்டுமன்றி, வில்லுப்பாட்டு, குறவஞ்சி, பள்ளு, மலையாள நாட்டு ஓட்டந்துள்ளல் (மலையாளக் களியாட்ட நாடகம்), பரத நாட்டியம், கதைகளி, வடநாட்டு நடன நாடகங்கள் ஆகிய வற்றிலெல்லாம் காணலாம். சிலப்பதிகாரம் இன்றைய தமிழர் கண்களில் நாடகமாகத் தென்படாததற்குக் காரணம் இதுவே. நாடகம் கதைக்கச்சேரி போன்ற நிலையில் இருந்த காலத்திய நாடகம் அஃது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

சமற்கிருத நாடகங்களில் உரையும் பாட்டும் விரவியே வந்தன. நடிகர் உணர்ச்சிமிக்க இடங்களில் பாடியும், பிற இடங்களில் பேசியும் வந்தனர். இதன் கலைப் பொருத்தத்தைக் காளிதாசன் போன்ற சிறந்த நாடகாசிரியர் நாடகங்களில் நாம் தெளிவாகக் காண்கிறோம். ஆனால், இதன் தோற்றம் கதை கூறும் மரபிலிருந்து வந்ததே. கிரேக்கர் துன்பியல் நாடகத்தில் கவிதையை மட்டுமே பயன்படுத்தினர். இதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம். கிரேக்கர் சிறந்த கலைப் பண்புடையவர். துன்பியல் நாடகத்தில் உணர்ச்சியற்ற பகுதிகளை விலக்கி, அதன் உணர்ச்சி வேகத்தை அவர்கள் வளர்த்தனர். அத்துடன் முதல் உரைநடை பெரிதும் கதை கூறுவதற்கே அமைந்தது. நடிகர் கூற்றின் மூலமே பெரிதும் கதைப் பகுதி விளங்கச் செய்யும் நாடகக் கலைத்திறமை கிரேக்கக் கலைஞர்க்கு இருந்தது தவிர, இன்றியமையா இடங்களில் கதைப் பகுதியை முன்னுரை, முடிவுரை, இடைக்காட்சி ஆகியவையாலோ, பின்னணிப் பாட்டாலோ அவர்கள் நிரப்பினர்.

சிலப்பதிகார நாடகப் பண்பு சமற்கிருத, கிரேக்கப் பண்புகளுக்கு மூலமானது. இங்கே உரைநடை கதை நிரப்பும்