உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

91

இன்னும் வியப்புக்குரிய செய்தி யாதெனில், ஒரே வண்ணம் காண்பவர்களிடையே, ஒருவர்க்கு அது கவர்ச்சி வண்ணமா யிருக்கிறது. மற்றொருவர்க்கு அது வெறுப்பு வண்ணமாய் விடுகிறது. இதுபோலவே, இரு வண்ணங்களையும் காண்பவர் களிடையே கவர்ச்சி, வெறுப்பு ஆகியவற்றில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் ஏற்பட்டுவிடுகின்றன.

ரு

இத்தனைக்கும் காரணம் சிலப்பதிகாரத்தின் பல்வகைப் பெருக்க வண்ணம்தானா? அல்ல, அல்லவே அல்ல! கோளாறு முற்றிலும் நூலில் இல்லை. அதனைக் காணும் கோணத்திலும் ல்லை என்பதை இறுதிச் செய்தி காட்டுகிறது. காண்பவர் உள்ளம் திறந்த உள்ளமாயிருந்தால், கருத்து வேற்றுமை ஏற்பட வழி இருக்கலாம். விருப்பு வெறுப்பு ஏற்படக்கூட வழி இருக்கலாம். ஆனால், விருப்பு வெறுப்புக் கடந்த ஒற்றுமையும் விருப்பு வெறுப்புகளுக்குள்ளேயே வேற்றுமையும் ஏற்படுவது திறந்த உள்ளத்தின் இயல்பன்று.

அடிக்கடி ஒரே ஆசிரியர் முன்னுக்குப்பின் முரணாக, ஆனால், விருப்பு வெறுப்பில் ஒரே திசையில் செல்வது காண்கிறோம். இது கருத்து வேறுபாடன்று. ஒரே உணர்ச்சியின் இருவகைப்பட்ட சூழ்நிலை விளைவென்பது தெற்றென விளங்குகிறது.

சிலப்பதிகார ஆராய்ச்சியாளர்களிடையே, சிலப்பதி

காரத்துக்குரிய தமிழ் மக்கள் சமுதாயத்துக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இக்கோளாறு சிலப்பதிகாரத்தைப் பற்றியது மட்டுமன்று. தமிழின் பல துறைகளிலும் அது பல வடிவில் நின்று செயலாற்றுகிறது. ஆகவே, சிலப்பதிகாரத்தின் பயனை மட்டுமன்றி வருங்காலத் தமிழகத்தையும் மனத்திற் கொண்டு இதில் கருத்துச் செலுத்துவோம்.

போற்றும் சிலர்

"இப்பொழுது நம் காலத்தவர் சிலரால் சிலப்பதிகாரம் மிகுதியாகப் போற்றப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழிசை யியக்கமே.”

இந்த வாசகம், திரு.எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களால் 1946-ல் எழுதப்பட்டது. காலஞ் சென்ற திரு.ஆர்.கே.சண்முகம்