உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 15

செட்டியார் அவர்கள் பதிப்பித்த புகார்க் காண்ட உரையின் முன்னுரையின் முதல் வாசகமே அது!

திரு.எஸ்.வையாபுரிப்பிள்ளை தமிழிசை இயக்கத்தில் ஆர்வமுடையவரல்லர். ஆனால், அதை எதிர்ப்பவருமல்லர். சிலப்பதிகாரத்தைப் போற்றுவது தவறு என்று அவர் கூற முன்வந்தால், இந்த வாசகம் பொருளுள்ள வாசகம் ஆகும். ஏனெனில், தம் ‘காலத்தவர் சிலரிடமிருந்து' இந்த ஒருவகையில் அவர் வேறுபட்டவராதலால் அச்சிலரை அசட்டையாக ஒதுக்க இடமேற்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரத்தை அவர் புகழத் தவறவில்லை. அதனை வெளியிட்ட திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் மீதோ அவர் பதிப்பு மீதோ அவர்க்குச் சிறிதும் வறுப்புக் கிடையாது.

அடுத்து வரும் வாசகங்கள் இதைக் காட்டுகின்றன.சிலரால் போற்றப்படுவதற்குக் காரணமான தமிழிசை இயக்கத்தில், "முன்னணியில் நின்று அதற்கு ஊக்கம் அளித்தவர்களுள் ஒருவர் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர்கள்.... முதற் காண்டத்தை... எளிய உரையாக இப்போது பதிப்பித்து வெளியிட்டிருப்பது மிகப் பொருத்தம் என்றே கருதுகிறேன்.”

திரு.வையாபுரிப் பிள்ளையவர்கள் சிலம்பின் அழகில் ஈடுபடாதவரும் இல்லை. இதனை அவர் வாசகங்களே காட்டும். "இசைப் பொருள் பற்றியும் சரித்திரப் பொருள்கள் பற்றியும் இக்காவியம் தமிழ் மக்களிடம் பரவி வந்ததேயன்றி, இதன் கதைச் சிறப்பும், கவிதைச் சிறப்பும், பிற இலக்கியச் சுவைகளும் பெரும்பாலும் பொதுப்பட அறியப்படாமலே கழிந்தன” அவர் சிலப்பதிகார இலக்கிய ஆர்வத்தையும் அதற்கு அவர் தரும் உயர்மதிப்பீட்டையும் நாம் இதில் காண்கிறோம்.

திரு.ஆர்.கே.சண்முகமும் சிலம்பும்

போற்றும் சிலர்க்கும், திரு.வையாபுரிக்கும் உள்ள வேறுபாடு, அவர் போற்றாததால் வந்ததன்று, போற்றும் வகையாலேயே வந்தது என்பதை இது காட்டுகிறது.

இனி, ஆர்வமற்ற, ஆனால், வெறுப்பற்ற பாராட்டுக்குரிய ஆர்.கே. சண்முகத்தின் போற்றுதல் எத்தகையதெனக் காண்போம்.