உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

|– –

அப்பாத்துரையம் - 15

அழகுணர்வில் ஈடுபடுபவனை மக்கள் இன்பவாணன் என்று கருதுவர். அறிவுணர்வில் ஈடுபடுபவனை அறிஞன் என்று மதிப்பர். நன்மையுணர்வில் ஈடுபடுபவனை அறவோன் என்று போற்றுவர். இம் மூவரும் சமுதாயத்தில் வேறு வேறான போக்குடையவர்கள். மக்களிடையே வேறு வேறான மதிப்பும் படியும்உடையவர்கள்.

மேலீடாகக் காண்பவர்களுக்கு இம் மூன்றும் வேறு வேறு பண்புகளாக, முரண்பட்ட அல்லது தொடர்பற்ற பண்புகளாகக் கூடத் தோற்றக்கூடும்; தோற்றுவது இயல்பு. வேறு வேறாகவே உலகின் மிகப்பெரும்பாலான மக்கள், பெரும்பாலான உலக அறிஞர்கள், உலகப் பெரியார்கள்வரை கருதிவந்தனர், கருதி வருகின்றனர். அவற்றிடையே தொடர்பு இருக்கக்கூடும் என்று கருதியவர்கள் உலகிலேயே மிகமிகச் சிலர். அவர்களும் அத் தொடர்பை மதித்துணர்ந்தது கிடையாது. ஆனால், இம் மூன்றும் ஒன்று என்பதே வள்ளுவர் பெருமான் கண்ட பேருண்மை.அத்துடன் இம் மூன்றன் தொடர்பையும் விளக்கி, மூன்றையும் ஒரே ‘பண்பின் மூன்று படிகளாக, மூன்று கோணங்களாக அவர் காட்டியுள்ளார். இம்மூன்றன் சரிஒத்த இணைவையே அவர் மனிதப்பண்பு என்றும், மூன்றன் நிறைவையே கடவுள்பண்பு என்றும் காட்டியுள்ளார். அவர் முப்பாற்பாகுபாட்டின் முழுநிறை சிறப்பும், அவர் முப்பால் நூலான உலகப்பொதுமறையின் முழுநிறை புகழும் இதுவே.

இன்பத்துப் பாலில் அழகுணர்வையும், பொருட்பாலில் அறிவுணர்வையும், அறத்துப்பாலில் நன்மையுணர்வு அல்லது அன்பையும் அவர் சிறப்பித்து முனைப்பாக விதந்தோதியது

காணலாம்.

அறநூல்கள் உலகில் மிகச் சில. ஆனாலும், அறநூல்களும், அற நூலோரும் பல நாடுகளில், பல மொழிகளில் உண்டு. பொருள் நூல்கள், இன்ப நூல்கள் உலகில் இன்னும் மிகச்சில. ஆனால், ஆங்காங்கே உலகின் வேறு வேறுபட்ட பகுதிகளில் அக்கருத்துகள் விரவிய ஏடுகளைக் காண்டல்கூடும். எனினும் முப்பால் வகுப்பும், முப்பால் நூல்களும் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உண்டு. இந்திய மாநிலத்தின் தனிப் பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பழைமையான ஒன்றாக இப் பாகுபாடு திகழ்கின்றது.