உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 79

-


மனித இன வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஆர்னால்டு டாயின்பீ கண்டு கூறியுள்ளபடி, மனித இன நாகரிகமும் பண்பாடும் நாகரிக சமுதாய அரசும் குறிஞ்சியில் முதல்முதல் பிறந்து உரம் பெற்று, முல்லையிலேயே நெடுங்காலம் தவழ்ந்து விளையாடி வளம் கண்டு, மருதத்தில் சென்று தங்கியபின்பே உலக சமுதாய அரசாகப் புதுமலர்ச்சி பெற்று நெய்தல் பாலை ஆகிய சேய்த்திணைகளில் மட்டுமன்றி, தாய்த் திணைகளாகிய குறிஞ்சி முல்லை ஆகியவற்றிலும் புதுவளர்ச்சியை பரப்பி, மனிதஇன நாகரிகத்தை அதன் இன்றைய நிலையில் திணைகடந்த அதாவது திணைவ ணைவரம்பற்ற நாகரிக சமுதாய

பரப்பாக்கிற்று.

அரசுப்

கோ என்ற சொல்லுக்குரிய மலை என்ற பொருளும் அதன் சொல்விரிவுகளாகிய கோபுரம் (மலையரசனின் மலைபோன்ற பெரும் படிச் சின்னம்), கோட்டை (கோ, கோடு-மலை), மலையோடிணைக்கப்பட்ட மலை போன்ற பாதுகாப்பு), கோட்டம் (ஆதி மனிதஇனப் பரப்பில் மலைப் போக்குகளால் விளைந்த பிரிவு, நாட்டுப் பெரும்பிரிவு, கோயில் வளாகம்) ஆகியவையும், அதே சொல்லினுக்குரிய மலையரச னாகிய குலமுதல்வன் என்ற பொருளும் அப்பொருள் மரபின் விரிவாகிய கோத்திரம் போன்ற சொற்களும் வேள்புலக் குடியரசு மரபின் குறிஞ்சி நிலப்பிறப்பு வளர்ச்சி வளங்களைக் குறித்துக் காட்டுகின்றன.

கோ என்ற சொல்லின் ஆவினம் (கன்றுகாலி) என்ற பொருள், அச்சொல்விரிவு பொருள்விரிவு மரபுவிரிவுகளாகிய கோன் (அரசன், இடையன்), கோவன், கோவலன், கோபன் (அரசன், இடையன், முல்லைநிலத் தெய்வமான கண்ணன் அல்லது மாயோன்), கோவி அல்லது கோபி (இடைக்குடி நங்கை), கண்ணன் காதல் துணைவியாகிய நப்பின்னைப் பிராட்டி அல்லது திருமகள், வைணவ நங்கை, வைணவ நங்கையரும் வடஇந்திய வைணவரும் நெற்றியில் அணியும் ஒற்றை நாமம்), கோகுலம் (கண்ணன் பிறந்த ஊர்: குலம்-குடி, குடியிருப்பு), கோல் இடையர் கைக்கோல், மன்னர் கைக்கோல், ஆட்சி, ஆட்சியின் தன்மை, அழகு) ஆகியவையும்; இது போலவே ஆய் (வேள் குடிப் பெயர், தலைவி-தலைவன்; ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்தல்,

து