உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80 ||

அப்பாத்துரையம் - 14



ஆராய்தல், தேர்ந்து உயர்ச்சி காணல், அருமை, சிறப்பு), ஆயம் (ஆதரவான முட்டுக்கோல், ஆதரவு, அரசர் சுற்றம், உயர்குடி நங்கையரின் பாங்கியர்குழு, அரசியல் மேலவை, அறிஞர் பேரவை; கிரேக்கம்: Areopagitica ஆரியர் மலையிருக்கை அல்லது அறிஞர் அவை. பண்டை ஆங்கிலம்: Witenasemot அறிவு வந்தவரவை, நாட்டுச் சட்டமன்றம்) ஆகிய சொற்களும் வேள்புல மரபின் முல்லைத் திணைக்குரிய நீடுவாழ்வையும் செறிவார்ந்த மலர்ச்சியையும் உணர்த்துகின்றன.

தமிழ் இலக்கண மரபில் தமிழர் போர்முறை ஆனிரை கவர்தலிலும் மீட்டலிலும் தொடங்கிக் கோட்டை முற்றுகையிலும் காப்பிலும் கோட்டைக்கு வெளியே களப்போரிலும் முதிர்வுற்றன. பாரதக் காதை பொதுவாகவும் அதன் விராட பருவம் சிறப்பாகவும் காட்டும் குறிஞ்சி முல்லை மருத மரபுப் பண்புகள் இவையே! கோட்டையின் மதியரண், காட்டரண்,நீரரண் (அகழி) ஆகியவற்றில் நாம் இம்முத்திணை மலர்ச்சிப் பண்பே காண்கிறோம். கோட்டை என்ற தமிழ்ச்சொல்லுடன் அதன் குறிஞ்சி அல்லது மலைசார்ந்த மரபுப் பண்பும் மராத்தி எல்லை கடந்து இரசபுதனம் வரை பரவியுள்ளன. சீனரிடமிருந்தும் துருக்கியரிடமிருந்தும் வெடிமருந்து, வெடிக்கலம் (துப்பாக்கி) ஆகியவை உலகில் பரவும் வரையிலும் அது கடந்தும்கூட நாகரிக உலகெங்கும் கோட்டைகளே அரசர் இளங்கோக்கள் வலிமைக்குரிய சின்னங்களாகக் கருதப்பட்டு வந்துள்ளன.

வேள்புல மலர்ச்சியின் குறிஞ்சித்திணை மரபுக் காலத்திலேயே வேள்புல இணைவாகிய ஆதி முடியரசுகள் அத் தாய் மரபிலிருந்து பிரிந்தன என்பது மேலே சுட்டப்பட்டது.இவ் வூழியின் பெண் இறைமை, பெண் வழிமரபு ஆகியவற்றிலிருந்தே இந்தியாவெங்குமுள்ள கோயிற்குருமாரும், கோயில் மரபு தழுவிய இசைவேளாளர் போன்ற கலைவகுப்பினரும் பிறரும் தனிமரபுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர் என்னலாம். வடமேற்கு இந்தியப் பரப்பில் இவர்கள் நட்வர் என்ற தாழ்த்தப்பட்ட மரபினராயுள்ளனர். முல்லைத்திணை மரபோ இன்னும் புரட்சி கரமான மாறுதல்கள் கண்டது. மனித இனம் வேய்ங்குழலும் நரம்பிசையும் பறைமுழக்கும் பிறவும் கண்டு முழுநிரை சைவளர்த்த திணை இதுவே. இப்பழந் தமிழிசை மரபுகள்