உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108 ||

அப்பாத்துரையம் - 14



ருவகுப்புகளாகவும்

() ||- வகுப்புகளாக மாறி, பிறப்படிப்படையாகவே முதலில் ஒரே வகுப்பாகவும், பின்னர் நிலையான (இரண்டுக்கு மேற்பட்ட வகுப்புகளாகக்கூட) மாறியுள்ளன. அத்துடன், உலகில் வேறெங்கும் இல்லாத நிலையில், சமுதாய உரிமையின் பெயரால் ஆளும் வகுப்பே உயர்வகுப்பாகியுள்ளது. இதுமட்டுமன்று கீழே விளக்க இருக்கிறபடி, இந்த இருவகுப்பு களுமே சமுதாய, பொருளியல் ஆட்சி வகுப்பாகவோ,சமய ஆட்சி வகுப்பாகவோ தோற்றினாலும் அவ்வாறே அவை தம்மை ஆர்வமுடன் சிலபல காலமாகக் குறித்துக்கொண்டு வந்தாலும், உண்மையில் அவை இரண்டும் அரசியல் வகுப்புகளே இரண்டுமே குடியரசு முடியரசுப் பண்புப் போராட்டத்திடையே படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றினுள்ளிருந்து மற்றொன்றாகத் தோன்றிய இரண்டு (அல்லது மேற்பட்ட) அரசியல் ஆட்சி வகுப்புகளே யாகும்.

குடியரசு, முடியரசுப் பண்பாட்டுப் போராட்டத்தில், இந்தியாவில் மட்டுமே ஏற்பட்ட இத்தனி வளர்ச்சிகளுக்குரிய காரணங்கள் நான்கு: இந்தியாவிலும், தமிழகத்திலும், கொங்குத் தமிழகத்திலும் குடியரசு முடியரசுப் போராட்டச் சூழல் களிடையே செயற்பட்ட இரண்டு அல்லது மூன்று தனிமரபுகள், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட ஒரு சூழல் ஆகியவையே

அவை.

தனி மரபுகளுள் முதலாவதாகக்குறிக்கத்தக்கது வேளிரிணைவால் பிறந்த தமிழ் மூவரசையும் (நான்காவதாக மகதப் பேரரசையும்) மூன்று (அல்லது நான்கு) என வரையறுத்த பண்டைத் தமிழ் இந்திய மரபு ஆகும். இரண்டாவது மூன்றாவது மரபுகள் தமிழகத்திலும் தமிழகத்துக்குப் புறம்பாக, இந்தியா விலும் இரு வேறு மரபுகள் போலச் செயற்பட்டு வந்துள்ள மொழிமரபின் இருவடிவங்களேயாகும். ஏனெனில், தமிழகத்தில் மட்டுமே மூவரசுகளும், வேள்புலங்களும் மொழித் துறையில் மரபுப் போட்டி இடாமல் தம்முள் ஒத்து ஒரே தமிழ்ச் சங்கத்தை ஏற்றுத் தமிழ் என்ற ஒரே மக்கள் மொழித் தேசியம் பேணும் நிலை ஏற்பட்டது. இதுவே இயல்பாக இந்தியா அளாவ, நாகரிக உலகளாவ வளர்ந்திருக்கக்கூடிய, வளர்ந்திருக்க வேண்டிய மரபு அல்லது பண்பு ஆகும். ஆனால் தமிழக, சீன, சப்பான் மரபுகள்