உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 125

ஐந்திணையளாவப் பரவி உழவாட்சி, தொழிலாட்சி, வாணிக ஆட்சி முதலானவற்றில் தலைப்பட்டனர். புதிய கூலவகை களையும் புதிய பயிர் வகைகளையும் பயிர் முறைகளையும் கருவிகளையும் (ஏருழவையும்) புதிய கால்நடை பயிர்ப்பினங் களையும் (Cattle-breeding) மருத நிலத்துக்குக் கொண்டு வந்து அவற்றை மீண்டும் ஐந்திணைகளிலும் பரப்பியவர்கள் அவர்களே, விதை வளத்துடன் மண் வளமும் உரவளமும் கண்டு இயைவித்து வளம் பெருக்கியவர்களும், உழவுக்கும் உழவர்க்கும் வளம் தரும் கால்நடை வளர்ப்பு, பால் வளப் பண்ணை, வாணிகம், நெசவு, உலோகத் தொழில் முதலிய பிற தொழிலாட்சிகள் கண்டு பெருக்கியவர்களும் கலைகள் இயல்கள் அறிவு நூல்கள் படைத்துக் கோளாளராகவும் தாளாளராகவும் ஒருங்கே விளங்கியவர்களும் இந்த இன உழவாட்சியாளராகிய பெரு வேளாளரேயாவர்.

ரு

இங்ஙனமாக, இந்தியாவில், முடியரசின் முதல் இரு ஊழிகளில் பிராமணரும் வேளாளரும் (தமிழ்: வேளாளர்-இன உழவாளர்; அந்தணர்-அந்தண்மை அதாவது மழையின் பண்பு உடையவர்; பார்ப்பார்-வாழ்க்கை இலக்கு நோக்குபவர்) உட்பட்ட ஆட்சிப் பெருங்குடி மக்கள் ஐந்திணைகளிலிருந்தும் வந்து மருத நிலத்தில் குழுமி, திணை மரபு கடந்த புதிய சமுதாயத்தின் ஆளும் வகுப்பினராய்ப் பரவினர். அவர்களில் பெரும்பாலோர், ஆட்சியிழந்த பழைய வேளிரும் வேள்புலக் குடியரசு மரபில் வந்த தன்னாட்சியாளருமேயாவர். அவர்கள் பேணிய பிறப்பு மரபு முற்றிலும் நேரடியான ஆதி மனித இனப்பிரிவுக்கு (Tribal Organisation) உரியது அன்று; நேர் மாறாக, அது குடியரசு மரபில் வந்த அதன் நாகரிக உலகச் சமுதாய மலர்ச்சி வடிவமேயாகும். அத்துடன் மேலே குறித்தபடி (கீழே விளக்கப்படும் முறையில்) முதலிரு ஊழிகளிலும் மன்னர் வழங்கிய பட்டங்கள் இப் பெரு வகுப்பினரின் தொகையைப் பெருக்கியதுடனன்றி, (மேலையுலகப் பெருமக்கள் பட்டங்கள் போலவே) வழி வழி மரபுத் தொடர்பையும் வலியுறுத்தின. பட்டங்களின் வேறுபாட்டால், அவர்களிடையே மரபு வேறுபாடுகளும் பெருகின. வேளாளர் என்ற ஒரே நாகரிக சமுதாயத்தின் தேசிய இனம் இதனால் மூவகுப்புகள், அவற்றின் சாதி மரபுகளாக நாளடைவில் பிளந்து தகர்வுற நேர்ந்தது.