உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 165

ஆகியவற்றில் மட்டுமே தொல்பழந் தாய் நில அல்லது தாய் இன அதாவது தூய தாய் மொழிப் பண்பு மரபுகள், காணப்படுகின்றன. பழமை வாய்ந்த தெய்வ மரபுகள், சமய வழக்கங்கள், மரபுகள், தெய்வங் களின் பழமையான பெயர்கள், பண்புகள் ஆகியவற்றின் செய்திகளும் இவை ஒத்தவையே. ஆனால், கொங்கு நாட்டு வாழ்வில் இந்த உயர்வு தாழ்வு வேறுபாடுகளோ சமுதாய இனப் பிளவு வேறுபாடுகளோ இல்லாமல் வேளாளரிடையேயும் பிற மரபுகளிடையேயும் தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட, தொல்காப்பிய, திருவள்ளுவ, சங்க காலங்களுக்குரிய மொழிப் பழமைகள், மரபுப் பழமைகள், பண்புப் பழமைகள் ஆகிய எல்லாவற்றையும் காணலாம். திணைநிலை ஆய்வாளர்கள் இவற்றை ஆய்ந்து சுட்டிக்காட்ட முற்பட்டுள்ளனர்.

மேலைக் கிறித்துவ, இசுலாமிய, யூத சமயத்தவர் இறைவனை இயேசுவின் தந்தை, அபிரகாமின் தந்தை என்று கூறுவதுண்டு. சங்க கால பழங்காலத் தமிழர் இறந்த இடம், இறந்த சூழல், ஆகியவற்றைச் சார்த்தி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், ஆனைமேல் துஞ்சிய பெருமாள் போன்ற பெயர் சுட்டும் மரபும் உடையவராயிருந்தனர். புகழ்பெற்ற முன்னோர், தந்தை பெயரேயன்றி, புகழ்பெற்ற மகன் பெயரும் ஒருவரின் சிறப்புப் பெயராக வழங்கப்பெற்றது காண்கிறோம். ஆந்தை (ஆதன் தந்தை), பூதந்தை (பூதன் தந்தை), சாத்தந்தை (சாத்தன் தந்தை) ஆகிய சொற்கள் கடவுள் பெயராகவும் (ஆதன், ஆதி ஆகியவையே கடவுள் சுட்டுவன) இயற்பெயர், சிறப்புப் பெயர்களாகவும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழங்கின என்பதை அவ்விலக்கணத்தில் அச்சொற்களுக்கு விதியமைத் துள்ளதன் மூலம் அறிகிறோம், இப்பெயர்களும் இதுபோல, சங்க கால வழக்கிலிருந்த புலவர் முதலியோர் பெயர்களும், பூதர், பேயர் போன்ற தெய்வ மரபுப் பெயர்களும், பிற பழக்கவழக்க மரபுகளும் சொல் மரபு, மொழி மரபுகளும் கொங்கு வாழ்விலும் கொங்கு வேளாளர் வாழ்விலும் பிற கொங்கு மரபினர் வாழ்விலும் பேரளவாகக் காணப் பெறுகின்றன.

மனித இன நாகரிகப் பழமை, இந்திய, தமிழகப் பழமைகளுக்குரிய ஆராய்ச்சியாளருக்கும் அவற்றில் பயின்று பழக விரும்பும் பண்பாளர்களுக்கும் கொங்கு வாழ்வும் கொங்கு