உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
194 ||

அப்பாத்துரையம் - 14



விச்சி நாடு அல்லது விச்சியர் நாடு, பண்டைத் தென் கொங்கு நாடாகிய இக்காலக் கொங்கு நாட்டில், தற்காலத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பச்சைமலைப் பகுதியே என்று கருதப்படுகிறது. அதன் சாரல்களில் வளர்ந்த பலாமரங்களின் வளமை பற்றிக் கபிலர் பெருமான் (புறம் 200) பாடியுள்ளார். சந்தன மரங்களும் கருங்காலி மரங்களும் அதன் காடுகளில் வளங்கொழித்திருந்தன. அம் மலைமீதிருந்த வெல்லமுடியாத ஐந்தெயில் கோட்டையிலேயே, விச்சியரின் வேளிர் ஆகிய விச்சிக்கோக்கள் வாழ்ந்துவந்தனர்.

சைக்

சங்கப் பாடல்கள், ஒரு விச்சிக்கோ பற்றியும், அவன் தம்பி இளவிச்சிக்கோ பற்றியும் பாடுகின்றன. அந் நாட்டில் குறும்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த பாணர்கள் (இன்றைய தாழ்த்தப்பட்ட வகுப்பினரல்லர், அவர்கள் முன்னோர்களான கலைஞர்கள்) விச்சிக்கோ காட்டில் தனியொருவனாக வெறுங்கையுடன் ஒரு கொடும்புலியுடன் மல்லாடி வென்றதைக் கண்டு வியந்து பாராட்டினர். இச் செய்தியைப் பரணர் (குறுந்தொகை 326) விரித்துரைத்துள்ளனர்.

கொங்குப் பெருஞ்சேரனான இளஞ்சேரல் இரும்பொறை, ஐந்தெயில் கோட்டையை முற்றுகையிட்டான். சோழரும் பாண்டியரும் விச்சிக்கோவுக்குத் துணையாய் நின்று போராடிய நிலையிலும், கோட்டை வீழ்ச்சியுற்று, நாடு, கொங்குப் பேரரசால் விழுங்கப் பெற்றது.

கழுவுள் என்ற வேளிர் தலைவனுக்குரிய காமூர் என்ற முல்லை நில வேள்புலம் பண்டைத் தென் கொங்காகிய இன்றைய கொங்கு நாட்டில் இருந்தது. அந் நாட்டின் பசுவள, பால்வளச் செல்வத்தால் அதன் மக்கள் ஓங்குபுகழ் பெற்றிருந்தனர். அவர்களின் கோட்டை அவர்கள் புகழ் போல ஓங்கிய மதில்களும், அவர்கள் செல்வ வளம்போல ஆழ்ந்தகன்று பரவிய அகழியும் உடையதாயிருந்தது!

கொங்குப் பெருஞ் சேரனான பெருஞ்சேரல் இரும்பொறை பதினான்கு வேளிர்களின் துணையுடன் கடும்போரிட்டுக் கழுவுளின் காமூர்க் கோட்டையையும் நாட்டையும்

கைக்கொண்டான்.