உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 221

(

யானைக் கட்சேயைத் தமிழகம் என்றும் மறக்க முடியாதபடி செய்துள்ள அவனது அருஞ் செயல் ஒன்று உண்டு. சங்ககால எட்டுத் தொகையினுள்ளே ஒரு முத்துத் தொகையாகத் திகழும் ஐங்குறுநூற்றை அருமுயற்சியுடன் அந் நாளைய கொங்கு நாட்டின் அறிவுக் களஞ்சியமாயிருந்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரைக் கொண்டு தொகுப்பித்த செயலே அது. சங்க இலக்கியப் பரப்பிலேயே புறநானூற்றுக்குரிய பழந்தமிழ்ப் பண்புக் கனிவும், குறுந்தொகைக்கும் சேக்சுப்பியருக்கும் உரிய நாடகத் திறமும் ஒருங்கே கொண்ட சிங்காரக் கலையழகுச் சிமிழ் என அதனைக் கருதலாம்; நற்றிணையின் வனப்புக்குக் கூட அது பெரிதும் பின்னடைவதன்று.

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் புலவராக மட்டுமன்றிச் சிறந்த கணியராகவும் (வானூலாராகவும் அதன் வாழ் பயன்கணிப்பு நூலாராகவும்) விளங்கினார். அவரே கொங்குச் சேரனின் அவைப் புலவராகவும் அரசவைக் கணியராகவும் விளங்கியிருத்தல் கூடும். தம் உளங்கொண்ட தலைவனாகவும், அரசனாகவும் விளங்கிய யானைக்கட்சேயினிடம் அவர் ஆரா அன்புடையவர். அந் நாட்களில் வானில் ஓர் எரிமீன் விழுவது கண்டு அவர் அது பேரரசனுக்குத் தீமை குறித்ததென்று கண்டு கவன்றதுடன், அதன்படியே அவன் மாண்டபோதும்

மனமறுக்கமுற்றுக் கையறவு (புறம் 229) பாடினார்.

கணைக்கால் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 190-210) கொங்குப் பேரரசின் கடைசிப் பேரரசன் ஆவான். முந்திய பேரரச மரபுடன் அவன் உறவுமுறைத் தொடர்பு யாது என்பதோ, அவன் எப்போது தவிசேறினான் என்பதோ தெரியவராத செய்திகள் ஆகும். அவன் ஆட்சி ஆண்டுகள் கூட (முதல் பேரரசன், முந்திய பேரரசன் ஆண்டுகளைப் போலவே) ஊகங்கள் ஆகும். ஆனால், அவன் கொங்குச் சேரருக்குரிய அதே மரபுப் பண்பில் வந்தவன் என்பதில் ஐயமில்லை; முந்திய பேரரசன் அப் பேரரசின் மாலைச் செவ்வான மென்றால், இப் பேரரசனை நாம் அதன், வீழ்வானச் செங்கதிரொளி என்னலாம் அவனைப் பாடிய பாடலாக, ஒரு சிறு காப்பியமே கூட உண்டு. அத்துடன் அவனே பாடிய ஒரு பாடல், கூற்றுவன் முகநோக்கிப் பாடிய ஒரு பாடல், சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.