உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
234 ||

அப்பாத்துரையம் - 14



() ||-

கடைச்சங்கத்துக்கும்


நெடிது முற்பட்ட

சங்க

காலத்திலிருந்தே தமிழர் தமிழ்ச் சங்கத்தை மூவரசு நாடுகள், வேள்புலங்கள் என்ற அரசியல் வேறுபாடுகளும் தென்னகத் தமிழ் நாடு, ஈழத் தமிழ்நாடு போன்ற நில அல்லது தேச வேறுபாடு களும் கடந்த ஒரு தேசங் கடந்த- தேசிய அமைப்பாகவே குறிக்கொண்டு, வழிவழி மரபாகவே திட்டமிட்டு வளர்த்து வந்தனர். இத் தேசியத் திட்ட மரபு வளர்ச்சியே தேசிய உள்ளங்களில் நின்று நிலவி மூவரசரும் வேளிரும் தம் தனிமுறைப் போட்டிகள் கடந்து தமிழ்ச் சங்கத்தை அன்புப் போட்டியிட்டு வளர்க்கும் படி செய்தது என்று காணலாம்.

உலகில் திட்டமிட்டு மொழி வளர்க்கும் சங்கமாக பிரான்சு நாட்டில் மட்டுமே கி.பி.10 அல்லது 14ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு சங்கம் நிலவி வந்துள்ளது. கலையியல் வளர்க்கும் சங்கங்களின் மூதாதையாகக் கிரேக்க நாட்டில் மட்டுமே அறிஞர் பிளேட்டோவின் கலைக்கூடம் (Academy: கி.மு. 5ஆம் நூற்றாண்டு) இயங்கிற்று. ஆனால் தமிழ்ச் சங்கம் மொழியும் இலக்கியமும் கலையும் அறிவுத் துறைகளும் திட்டமிட்டு வளர்க்குமிடமாக மட்டுமன்றி, அவற்றின் ஆட்சியமைப்பாகவும், பள்ளி கல்லூரி பல்கலைக் கழகங்களை நாடுகடந்து வேள்புலம் கடந்து வளர்த்து இணைத்து ஆளும் மைய அமைப்பாகவும் இயங்கியிருந்தது.

குடியரசு மரபிலேயே இந்திய, உலகப் பல்கலைக்கழகங்கள் வளர்ந்துள்ளன என்பது மேலே சுட்டப்பட்டுள்ளது. மதுரைத் தமிழ்ச் சங்கம் அப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் மூலமரபாய் அமைந்த மரபு ஆகும் என்பதும் அங்கே குறிக்கப் பட்டது. ஆனால் அது பல்கலைக் கழகமோ, கலைக்கூடமோ, அறிவியற்கூடமோ மட்டுமன்று. நாகரிக உலகு அல்லது தமிழுலகளாவி, தேசியம் கடந்த பெருந் தேசிய வாழ்வின் மொழி, கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றையும், தொழில் வாணிகம் ஆகியவற்றுக்கு அடிப்படையான அறிவாய்வுத் திறங்களையும் திட்ட மிட்டு வளர்க்கும் அரசியல் கடந்த அமைப்பாகவே அது இயங்கி வந் திருந்தது ஆதல் வேண்டும். இதற்கான கிளையமைப்புகளை, கிளைச் சங்கங்களை அது மூவரசு நாடுகள் தோறும் வேள் புலங்கள்தோறும் அப்பாலும்