உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
236 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


வாய்ந்த கொங்கு மரபாக வளர்த்தது போல, கொங்கு நாட்டின் அகல் விரிவாகிய பண்டைத் தமிழகமும் அரசு குடியரசுகளின் மேலாட்சியலைகளால் பாதிக்கப்படாத முறையில் வாழ்வு வளம், கலை அறிவியல் மொழி இலக்கிய வளம், தொழில் வாணிக வளம் ஆகியவற்றுக்குரிய ஒரு முழுக் குடியாட்சி அமைப்பாகவே தமிழ்ச் சங்கத்தை வளர்த்து வந்தது என்னல் தகும். இந்த அமைப்பில் தற்காலக் கொங்கு மக்களின் முன்னோராகிய பண்டைக் கொங்குத் தமிழரின் பங்கு மிக மிகப் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமிழ் வளர்ப்பில் மைய இடம் மதுரையாய் இருந்ததென்றால், குடியரசுப் பண்பு வளர்ப்பின் மையநிலம் கொங்கு மாநிலமாகவே என்றும் அமைந்து வந்துள்ளது.

-

இந்தியாவெங்கும் இருந்த வேள்நாடுகள் அல்லது குடியரசுக் குழு அமைப்புகளில் மைய அமைப்பாகவும் முழு நிறை மலர்ச்சியுற்ற அமைப்பாகவும் இன்று வரை உயிர் மலர்ச்சி பெற்ற அமைப்பாகவும் நிலவுவது சங்க கால வேள் நாடு அல்லது வேளாள் நாடு ஆகிய தற்கால கொங்கு அகநாடேயாகும். சொல்லேருழவர், அறிவேருழவர், பண்பேருழ வரின் ஒரு வேள் நாடாகவே அரசு குடியரசு எல்லை கடந்து தமிழுலகும், தமிழ்ப்பண்புலகும் ஆளமுற்பட்ட ஒரு குடியாட்சி முடியாட்சி எல்லை கடந்த குடியாட்சிக்குழு அமைப்பாகவே தமிழ்ச் சங்கம் நிலவிற்று.

பிரிட்டனின் மாமன்றத்தை மாமன்றங்களின் தாய் (Mother of Parliaments) என்று கூறுவதுண்டு. தென் மதுரை அலைவாய் மரபுகளில் வந்து மதுரையில் வளர்ந்த சங்கத்தையும் இது போல நாம் நாகரிக உலகப் பல்கலைக்கழகங்களின், அறிவியற் கூடங்களின், வாணிகத் தொழில் துறை ஆராய்ச்சிக் கூடங்களின் உலகத் தாய் நிறுவனம் என்று கூறலாம்.

பாண்டியன்

மூவரசு நாடுகளும் வேளரசுகளும் மதுரையையே தமிழுலகின் தேசிய மையமாக ஏற்றமைந்ததற்குரிய காரணங்களுள் தலையான ஒன்று, குடியரசு மரபுத் தேசியமாக வளர்ந்த அது குடியரசு மலர்ச்சியின் மையமாக அமைந்த கொங்கு நாட்டினருகே தமிழக மையமாய், கொங்கு நாட்டுக்