உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 16

தமிழக வரலாற்றில் வல்லத்தில் நடைபெற்ற போர்கள் பல. அவற்றுள் முதல் போர் ஆரியர் படை உடையத் தமிழர் ஆற்றிய இப்போரேயாகும். இப்போரில் ஈடுபட்ட சோழமன்னன் யார்? அது செருப்பாழிப் போரையொட்டி நிகழ்ந்ததா? பின் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை.

கரிகாலன், நெடுஞ்செழியன் இமயம் படையெடுப்பு

வடதிசையில் படையெடுத்த சோழன் கரிகாலன் இரண்டாம் கரிகாலனே. இவன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. வடதிசை வடதிசை வென்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றி நாம் மிகுதி அறிவதற்கில்லை.

66

‘வட ஆரியர் படை கடந்து

தென் தமிழ் நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடிஞ்செழியன்”

(சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இறுதிக் கட்டுரை)

என்ற இளங்கோவின் முத்தமிழ்க் காப்பியக் கூற்றினும் விளக்க மிக்க சான்று நமக்குக் கிட்டவில்லை.

சங்கப் பாடல்களில் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனைப் பற்றிப் பாட்டுகள் எதுவும் நமக்கு வந்து எட்ட வில்லை. ஆனால், அவன் பெருவீரன் மட்டுமல்ல; சிறந்த சிந்தையும் செழுங்கலைத் திறமும் படைத்தவன் என்பதை அவனே பாடிய பாடல் ஒன்று காட்டுகிறது. அதுவே,

“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன்வருக என்னாது, அவருள்