உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

77

இரண்டாம் கரிகாலனாக இருக்க முடியாது. ஆயினும் தமிழகத்தில் வேளிரன்றி ஒன்பது மன்னர் அந்நாளில் இருந்தனர் என்று கூறமுடியாது. தமிழகத்துக்கு வடக்கே கன்னட தெலுங்கு நாடாகிய வடுக எல்லையில்கூட இப்பழங்காலத்தில் ஒன்பது மன்னர் அந்நாளில் இருந்திருக்கக்கூடுமா என்று ஐயுற இடமுண்டு. ஆந்திரர், கலிங்கர், சூடுநாகர் அல்லது சூடுபல்லவர் கடம்பர் ஆகிய பேரரச மரபினரே அக்காலத்தில் நிலவியிருக்கக் கூடும். எனவே முதற் கரிகாலன் வாகைப்பறந்தலை வெற்றி தொலைத் தென்னாடு அல்லது வடநாட்டு வெற்றியாகவே ருத்தல் வேண்டும்.

‘பீடில் மன்னர்' 'ஓடுவை' என்ற புலவர் சொற்கள் அயலின அரசரே குறித்த தொனியை உடையன.

தவிர பரணர் சங்ககாலப் புலவர்களிலே மிகமுற்பட்டவர்; நீண்ட நாள் வாழ்ந்தவர்; அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளைஞராயிருந்தவர். மாமூலனாரோ பரணரிலும் பழமை வாய்ந்தவர். அவர் மோரியருக்கு முற்பட்டு கி.மு.3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். இவற்றை நோக்க மாமூலனாராலும், பரணராலும் பாடப்பட்ட வெண்ணி முதற் போர், வாகைப் பறந்தலைக்குரிய கரிகாலன் முதற்கரிகாலன் என்று முனைவர் இராசமாணிக்கனார் குறித்த அரசனுக்கும் முற்பட்ட ஒரு மூல முதல் கரிகாலனாயிருந் திருக்கக் கூடும்

என்னலாம்.

இது மேலும் ஆராய்வதற்குரியது.

மேருவைச் செண்டாலடித்தல், காவிரிக்குக் கரைகட்டல் முதலிய சிலப்பதிகார, பிற்கால மரபுக்குரிய செயல்களில் சில வேனும் இம்மூல முதல் கரிகாலனுக்குரியன ஆகலாம். 'பெரும் பெயர்க்கரிகால்' என்ற சங்க ஏடுகளில் கூற்றுக்கள் மூலமுதல் கரிகாலன் மரபும் பெயரும் உடைய கரிகாலன் என்ற பொருள் கொண்டனவாகவும் இருந்திருக்கக் கூடும்.