உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




252 |

அப்பாத்துரையம் - 16

என்று இராசேந்திரன் மெய்க்கீர்த்தி இவ் வெற்றிகளைக் குறிக்கிறது.

ஈழப் பெரும் போர்: 1017

இராசராசன் காலத்து ஈழப்போரில் ஐந்தாம் மயிந்தன் நாட்டாட்சியைச் சோழரிடம் விட்டுவிட்டு, ரோகண நாட்டு மலைப் பக்கங்களில் சென்று ஓடி ஒளிந்து கொண்டான். அவன் சில ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்து படை திரட்டிச் சோழர் ஆட்சியை எதிர்க்க முற்பட்டான். இதன் பயனாக1017-ல் முதலாம் இராசேந்திரன் மீண்டும் ஈழநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று போர் தொடுத்தான்.

இத்தடவை சோழர் வெற்றி முன் என்றும் இல்லாத முறையில் நிறைவெற்றியாயிற்று. ஏனெனில் சோழர் ஐந்தாம் மயிந்தனைப் போரில் முறியடித்துச் சிறைப்படுத்தினர். அவனைச் சோழ நாட்டுக்கே அனுப்பிக் காவலிலும் வைத்தனர். அத்துடன் இராசேந்திரன் அவன் முடியையும் அவன் அரசியணிந்த முடியையும் கைக் கொண்டான். தவிர, முதன் முதலாம் பராந்தகன் ஆட்சியில், பாண்டியன் ஈழ அரசனிடம் அடைக்கலமாக வைத்துவிட்டுச் சென்ற சுந்தர முடியும் இந்திரனாரமும் கூட இப்போது சோழன் கைவசமாயின. ஈழத்தீவு முழுவதும், இராசராசன் ஆட்சியில் சோழர் ஆட்சியுட்படாதிருந்த ரோகணநாடு உட்பட, சோழர் ஆட்சிக்கு உட்பட்டது.

இத்தகைய ஒரு வெற்றியை உளத்தில் கொண்டே இராசராசன் தன் இலங்கைத் தலைநகரைத் தீவின் மைய இடமாகிய பொலன்னருவா அல்லது சனநாதமங்கலத்தில் தேர்ந்தமைத்தான் என்பது இச்சமயம் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

“பொருகடல் ஈழத்து அரசர் தம் முடியும், ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும், முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும் தெண்டிரை ஈழமண்டல முழுவதும்