(322
அப்பாத்துரையம் - 16
குலசேகரனுக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். அவர்களிடையே சுந்தரபாண்டியன் உரிமை மனைவியின் புதல்வனென்றும், வீர பாண்டியன் துணைப் பெண்டிர் புதல்வன் என்றும் கூறப்படுகிறது.வீரபாண்டியனையே குலசேகரன் இளவரசனாக் கியதால் சுந்தர பாண்டியன் கடுஞ்சினங் கொண்டு தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற முயன்றான். இதில் தோல்வி யெய்தவே அவன் நாமக்கல் சென்று அங்கிருந்து ஆண்டான்.
தலைச்சிக் குளங்கரைப் போர்
இரண்டு பாண்டிய அரசுரிமையாளரும் மோதிக்கொண்ட போர் இது. இதில் வீரபாண்டியன் படுகாயம் உற்றான். உடலும் பனி நடுக்க முறத் தொடங்கிற்று. ஆகவே, அவன் இறந்தானென்று று கருதிக் களத்தில் போட்டு விட் டு சுந்தரபாண்டியன் சென்று முடி சூட்டிக் கொண்டான்.
வீரபாண்டியன் மாளவில்லை. பிழைத்தெழுந்து மீண்டும் சுற்றினான். சுந்தரபாண்டியன் தந்தையைக் கொன்ற செய்தி கூறி மற்ற உறவினரைத் திரட்டினான். மீண்டும் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்.
நாடிழந்த சுந்தர பாண்டியன் வட திசையில் தில்லியில் ஆண்ட பேரரசன் அலாவுதீனிடம் உதவி கோரினான். அவன் மாலிக்காபூர் என்ற படைத்தலைவனை அனுப்பினான்.
மாலிக்காபூர் தென்னாட்டின் அரசரான தேவகிரியாதவர் துவார சமுத்திரத்து ஹொய்சளர், பாண்டியர் ஆகிய எல்லா நாடுகளும் கடந்து இராமேசுவரம் வரை கொள்ளையடித்துச் சென்றான்.
மெய்ந்நிலை
இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால், முழுதும் உண்மையாய் இருக்க முடியாது அரசுரிமைப் போட்டி இருந்ததும் அதற்கான காரணங்களும் உண்மை நிகழ்ச்சியே. தலைச்சிக்குளங் கரைப்போர் முதலிய செய்திகளும் மெய்ந் நிகழ்ச்சிகளே. ஆனால், இரு பாண்டியர் களுள் ஒருவர் வடதிசையாண்ட அரசனை அழைத்ததினாலேயே மாலிக்காபூர் படை யெடுத்தான் என்பதோ, அது தலைச்சிக்