உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் – 18

மனித இனத்தில் எல்லா இனங்களுமே இத்தகைய ஒரு படியில் நீடித்து அதன் பின்பே குடும்ப வாழ்வில் இணைந்தனர் என்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். நாகரிக அடிப்படையாகப் பார்த்தாலும், உயிரினங்களின் பண்படிப்படையாகப் பார்த்தாலும், இது முற்றிலும் தவறான வரலாற்றுக் காட்சி ஆகும். ஏனெனில், வேட்டைப்படி,நாடோடி வாழ்க்கைப்படி இரண்டும் அவர்கள் கருதுவதுபோல் ஒன்றல்ல. குடும்பப்படி, குடிவாழ்வுப்படி ஆகியவையும் ஒன்றல்ல நாடோடி வாழ்விலும் வேட்டை வாழ்வு, மேய்ச்சல் வாழ்வு, நாடோடி உழவு வாழ்வு என்ற படிகள் உண்டு. குடிவாழ்விலும் இப்படிகள் உண்டு.

உலகில் ஆசிய, ஐரோப்பிய நடுமலைத் தொடர்களுக்கு (இமயம், இமயத்தின் தொடர்ச்சி ஆகியவற்றுக்கு) இப்பால் தெற்கிலுள்ள இனங்கள் தொடக்கத்திலிருந்தே குடும்ப வாழ்வுடன் சமுதாய வாழ்வும் பெற்றுப் பண்பாட்டில் வளர்ந்தன. மிக முற்பட்ட காலத்திலேயே குடிவாழ்வும் வீடும் ஊரும் நாடும் அரசும் சமயமும் வகுத்ததனால், அவர்களிடையே ஒற்றுமை கெட்டு, பூசலும் போரும் பெருத்தன. ஆனால், நடுமலைத் தொடர்க்கு வடக்கேயுள்ள இனங்கள் குடும்ப வாழ்வில்லாத சமுதாயம் அதாவது நாடோடிக் குழுக்களாக இருந்தன. அண்மைக் காலம்வரை, இன்றுகூட, அந்த நிலை உட்பகுதிகளில் முற்றிலும் மாறவில்லை. இந்த இனங்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் பிற்பட்டிருந்தன. ஆனால் ஒற்றுமை, வீரவெறி, எப்பண்பாட்டையும் மேலீடாக எளிதில் மேற்கொள்ளும் தன்மை உடையவராய் இருந்தனர். நாடோடி வேட்டைப்படியிலும் நாடோடி மேய்ச்சல் வாழ்வுப்படியிலும் இருந்த இந்த இனங்கள் நாகரிக உலகில் வந்த பின்னரே குடும்ப, குடிவாழ்வுப் படிகளை அடைந்தன.

நாடோடி வேட்டைப்படியிலுள்ளவர்கள் அன்றும் இன்றும் குடும்பச் சிந்தனை, இனச்சிந்தனை அற்றவர்களாய் இருப்பது காணலாம். நாகரிக சமுதாயத்திலேயே இத்தகை யவர்கள் சமுதாயக் கேடான செயல்களில் எளிதில் ஈடுபடு கின்றனர். குடிவாழ்வுச் சமுதாயங்கள், அரசியல்கள், சமயங்கள் யாவும் இவர்களை எளிதில் திருத்த முடிவதில்லை. ஏனெனில், வாழ்க்கைக் குறிக்கோளற்ற இவர்கள் மேலீடாக எப்பண்பையும்