உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 18

குடும்பப் பண்பில் தமிழகத்துக்குச் சிறிதும் குறையாத, ஓரளவு மேம்பட்ட நாடாகவே அமைந்தது. முதலாளித்துவத்துக்கு ஓர் அடிப்படைப் பண்பைத் தந்தது இதுவே.

'வாழ்க்கை வாழ்வதற்கே’, ‘கலை கலைக்காக,’ ‘தங்கு தடையற்ற விடுதலையே மனிதன் உயர்நிலை பேணும்' என்ற பல சீரிய குறிக்கோள் வாதங்கள் களியாட்டவாதிகளால் பயன் படுத்தப்படுகின்றன. பெண் உரிமை இயக்கம், பகுத்தறிவு இயக்கங்கள் ஆகியவற்றில் களியாட்ட வாதம் புகுந்தால், சில சமயம் அந்த நல்ல இயக்கங்களின் எதிரிகள் வாதங்களை மெய்ப்பிக்கும் முறையில், அஃது அவ்வியக்கங்களின் அடிப்படைக் குறிக்கோளைக் கெடுத்துவிடுகிறது.

வேட்டை வாதம், களியாட்ட வாதம் இரண்டும் வாழ்வில் வெற்றி, இன்பம் தவிர, வேறு குறிக்கோள் கிடையாது என்று கூறுபவை, அல்லது கூறாமல் உள்ளத்துள் கொண்டு செயலாற்று பவை. இரண்டிலும் உள்ள கேடு, வெற்றியை ஒவ்வொருவரும் தம் வெற்றிமட்டும் தான் என்றும், இன்பத்தைத் தம் இன்பம் தான் என்றும் கொள்வதே.

எல்லார்க்கும் வெற்றி, எல்லார்க்கும் இன்பம் என்ற குறிக்கோளைக் கொள்வதனால், அதைவிட உயரிய வாழ்க்கைக் குறிக்கோள் இருக்க அே முடியாது.

தமிழர் வாழ்க்கைக் கோட்பாடு கொண்ட குறிக்கோள்

இதுவே.

வெறி வாதங்கள், மருட்சி வாதங்கள்

மனித சமுதாயத்தில் வளர்ந்துள்ள தவறான, அழிவு தருகிற அல்லது ஆக்கம் கெடுக்கிற வேறு இரண்டு வாதங்கள் வெறி வாதமும், மருட்சி வாதமுமேயாகும். அவை இரு வாதங் களானாலும் இருநூறு வடிவங்களுடன் காட்சியளிப்பன.

வெறி வாதங்கள் என்பவை சில வினைமுறைகள், சில கொள்கைகள், சில தெய்வங்கள் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக்கி, அதையே வற்புறுத்திப் பரப்பும் ஆதிக்கக் குழுவை வளர்ப்பதாகும்.