உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

85

தோற்றம் காண்டல் முடியும். மூவரசரும் தொடக்கத்தில் குடியரசுகளின் தலைவர்களாகவே குடியரசர்க்கு மேற்பட்ட வலுவுடையராயினர் என்பதில் ஐயமில்லை. அந்தக் கூட்டுக் குடியரசுகளிடையே பெண் கொள்ளல் கொடுத்தல் மூலம் ஏற்பட்ட ஒற்றுமையினாலும். எல்லாக் குடியரசுகளின் சின்னங் களையும் ணைத்ததனாலும், எல்லாக் குடிப் பெயரும் மேற்கொண்டதனாலும்; தமிழ்ச் சங்கம் காவிரிக்குக் கரை கட்டல் முதலிய தேசியத் திட்டங்களை மேற்கொண்டு முடியரசு களுடனும் சூழ் குடிகளுடனும், நேரடித் தொடர்பு கொண்ட தனாலும் அவர்கள் மிகப் பழைமைதொட்டே குடியரசர்க்கு மேற்பட்ட பேரரசச் சின்னமான 'முடி'யும் செங்கோலும் பெற்றனர் ஆதல் வேண்டும்.

சங்க

பாண்டியன் குடிப் பெயர்களாகிய செழியன், மாறன், வழுதி, மீனவன், வேம்பன், பஞ்சவன், கைதவன் என்பனவற்றுள் சிலவேனும் பாண்டியர் குடிக்குள் இணைந்துவிட்ட பழைய குடியரசுகளின் பெயர்களாய் இருத்தல் கூடும். காலத்திலேயே இ க் காரணத்தால் பழையன் மாறன் பாண்டியனுக்கு அடுத்த பெருமையுடையவனாயிருந்தும், படைத் தலைவனாய்த் தன் பழங்குடிப் பெருமைக்குப் புதுப் புகழ் தந்ததும் கவனத்துக்கு உரியது. பழைய குடியரசன் ஒருவன் பெயராகிய ஆரி என்பவனாலேயே ஆரியர் முதலிய ஊர்ப் பெயர்களும் ஆரிய நாடு என்ற பாண்டியர் உள்நாட்டுப் பகுதிப் பெயரும் ஏற்பட்டன.

இதுபோலவே சென்னி, கிள்ளி, செம்பியன், வளவன், புனனாடன் என்ற சோழக் குடிப்பெயருள்ளும், மலையன், பொறையன், குட்டுவன், வானவன், இமயவன், வில்லவன், கோதை, குடவன், உதியன் என்ற சேரர் குடிப் பெயருள்ளும்

ணையரசின் உறுப்புகளையே காண்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சங்க காலத்திலேயே அக் குடிகளில் சில பல தனியாகவும் நிலவின. முடியரசர் பேரரசராக வளர்வதற்குப் புதிய வேளிர் குடி மணஉறவு எவ்வாறு பயன்பட்டன என்பதையும் இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது. உண்மையில் திருமண மூலமே 12ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வேங்கி நாட்டுடனும் கீழைச் சாளுக்கியருடனும் எளிதில் இணைந்தது.