உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

89

இதுமட்டுமன்று, தமிழ்நாட்டில் பிறமொழி கற்றும் தமிழ்ப் புலமையைப் பழியாது அதனை மேற்கொண்டு தமிழ்க்கு உழைக்க முன்வந்த தமிழ்ப் பெரியார்கள் தமிழர் என்ற காரணத்தினாலும், தமிழ்க்கு முதலிடம் தந்து உழைப்பவர் என்ற காரணத்தினாலும்; கூலித் தமிழரின்' இனவளர்ச்சியில் கருத்துக் கொண்டு, அவர்கள் தாய்மொழியாகிய தமிழை உயர்த்துவதன் மூலம் அவர்களை உயர்த்த முயன்றவர்கள் என்ற காரணத்தினாலும், அப்பெரியார்களைத் தமிழ்ச் செல்வர் ஒதுக்கித் தள்ளிவந்தனர்- வருகின்றனர். இதேபோன்று இன்று உழைக்க முன் வருபவர்களும் அரசியலாரால் ஒதுக்கப்படுவது போலவே,

LDL

ாதிபதிகளாலும் செல்வர்களாலும் வேம்பென ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர். ஆனால், யாழ்ப்பாணத் தமிழ்ச் செல்வரும் பிற கடல் கடந்த நாட்டுத் தமிழ்ச் செல்வரும் அவர்களில் பலர்க்கு ஆதரவு தந்து, தாயகமாகிய தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பின் மரபும் ஊற்றும் வற்றாமல் பாதுகாத்துவந்தனர். தமிழ்நாட்டுச் செல்வரின் செயலுக்கும் அயல்நாட்டுத் தமிழ்ச்செல்வரின் செயலுக்கும் உள்ள இவ்வேறு பாட்டின் காரணம் என்ன? இது செல்வரின் பண்பு அல்லது முதலாளித் துவத்தின் பண்பு என்று முற்றிலுங் கூறிவிட முடியாது என்பது தெளிவு. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நடைபெற்று வந்துள்ள ஆரிய திராவிடப் பண்பாட்டுப் போராட்டத்தில் இன்று தமிழ்நாடு முன்னணிப் போர்க்களமாய் அமைந்துள்ளது. வட நாட்டை விழுங்கிவிட்ட பின்பே தென்னாட்டுக்கும், தமிழகஞ் சார்ந்த தமிழின நாடுகளை ஓரளவு தன்னிழற் கீழ்க்கொண்டு வந்த பின்பே தமிழ் நாட்டுக்கும் அப் போர் பரவியிருப்பதுபோல, தமிழ்நாடு கடந்த பின்பே அது யாழ்ப்பாணத்தையும் கடல்கடந்த பிற தமிழகங்களையும் முழுவதும் தாக்க முற்பட முடியும். இந்நிலை வரும்வரை யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் செல்வரும் கடல் கடந்த தமிழ்ச் செல்வரும் ஓரளவுக்கேனும் செல்வராகவும் அதே சமயம் தமிழராகவும் இயங்க முடியும். ஆனால், தமிழ்நாட்டுச் செல்வர் இன்று அங்ஙனம் இயங்கமுடியாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றத் தமிழின நாட்டுச் செல்வர், ஆட்சியாளர், அரசர்கள் ஆகியவர்களைப்போல, அவர்கள் தமிழ் மரபழித்து அயற்பண்பாகிய ஆரியப் பண்பைச் சார்ந்தன்றிச் செல்வர்