உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அப்பாத்துரையம் - 19

ஆகவோ, செல்வராயிருக்கவோ, செல்வம் பெருக்கவோ வழியேற்படாது. ஆகவே, தமிழ்நாட்டுச் செல்வரும் மடாதி பதிகளும் சமயத் தலைவர்களும் இன்று தமிழ்ப் பண்பையோ தமிழ் மரபையோ ஆதரிக்க அஞ்சி அயற்பண்புகளுக்கு முழுவதும் அடிமைப்பட்டிருப்பதும் மேன்மேலும் அடிமைப் பட்டு வருவதும் அவர்கள் குற்றமன்று. தமிழ்நாட்டின் குற்றமுமன்று. தமிழ்நாடு துணைக்கண்டத்தின் ஆட்சியுடனும் பண்பாட்டுடனும்

நிலை மாறாது.

ணைந்திருக்கும் வரை தமிழகத்தில் இந்த

தமிழியக்கம், தமிழரியக்கம் ஆகிய இரண்டும் தமிழின இயக்கமாய், எதிர்கால மொழி வாழ்வை முன்னிட்டுப் பிரச்சார இயக்க அளவில் கடல்கடந்து தமிழுலகை நோக்கியும்; எதிர்கால நாகரிக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வை முன்னிட்டு நிலங்கடந்து தமிழின நாடுகளை நோக்கியும் முன்னேறி வருகிறது. தமிழ்மொழிப் பரப்புக்கும் தமிழினப் பரப்புக்கும் இடையேயுள்ள பொது நிலமாய்; முன்பு தமிழராயிருந்து ஆரியப் பண்பாட்டின் தாக்குதலால் தமிழரிடமிருந்து விலகியும், அதே சமயம் ஆரியராய்விடவும் முடியாமல், தமிழரைத் தாக்கப் பயன் படும் ஆரிய அடிமைக் கண்காணி நாடுகளாய் மட்டும் இயங்கும் தமிழின நாடுகளுக்கும் கடல்கடந்த முழுத் தமிழ் வாழ்வுடைய நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையுடையதாய்; தன்னகத்தே ஆரிய அடிவருடிகளான ஆண்மையற்ற தமிழரையும், அவர்களுக்கு அஞ்சி அடங்கிக் கிடக்கும் பொது மக்களாகிய அடிமைத் தமிழரையும், ஆரியத்தையும் ஆரிய அடிவருடிகளான ஆண்மைத் தமிழரையும் எதிர்த்துப் பொதுமக்களை உயர்த்தப் பாடுபடும் தனித்தமிழர் அல்லது திராவிட இயக்கத் தமிழரையும் தன்னகங்கொண்ட தமிழ்நாடு தமிழியக்கத்துக்கும் தமிழின இயக்கத்துக்கும் உரிய பாலமாய், தமிழரியக்கத்தின் நிலைக்களமாய் அமைந்தது இயல்பே.

ஆரிய மொழியாதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும், கல்வியாதிக்கமும் நீங்க அதன் அரசியல் ஆதிக்கமும் நீங்குதல் வேண்டும். அப்போதுதான் தமிழ் உண்மையிலேயே முதலிடம் வகிக்கும்.அப்போதுதான் தமிழராட்சியும் தமிழ் நாட்டாட்சியும் கல்வியாட்சியும் தமிழராட்சியாக, அதாவது தமிழ்ப் புலவர்