உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

75


சதுர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற உத்திரட்டாதிநாள் (3) வடகரை விக்கிரம சோழவளநாட்டு இன்னம்பர் நாட்டு உடையார் திருவிசையமங்கை யுடைய நாய (4) னார் திருமடை வளாகத்து திருத்தொண்டத் தொகையன் திருமடத்து ஸ்தானபதி சுப்பிரமண்ணிய சிவனேன் இந் (5) நாயனார்க்கு திருப்பள்ளித் தாமம் ஆக்குவார்க்கு ஜீவனத்துக்கு உடலாகத் திருநந்தவனபுரமாகக் கொண்டு விட்ட நிலமாவது (6) ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்து கோதண்டராம வதிக்கு மேற்கு வானவன் மாதேவி வாய்க்கா (7) லுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்று முதற் சதுரநிலம் (8) மாலின் வடக்கடைய நிலம் நான்மாவரையில் (9) மேற்கடைய நிலம் இரண்டு மாக்காணியில் கீழ்க்கடை நிலம்... (10) அரைமா நீங்க இதன் வடக்கு நான்கிளி நல்லூர் கிழவன் நாயன் வாழவந்த நாயன்தீபத்தரையர் பக்கல் (11) விலைகொண்டு உடையேனாய் என்னுதாய் இருந்த வெட்டுப்பாழ் நிலம் கானியும் சந்திராதித்த வரை.. (12) திருநந்தவனம் ஆக்குவார்க்கு ஜீவனசேஷமாக விட்டேன் உடையார் திருவிசயமங்கை உடைய நாய (13) னார்க்குத் திருத்தொண்டத் தொகையன் திருமடத்து ஸ்தானபதி சுப்பிரமணிய சிவனேன் (14) இவை என்னெழுத்து - இவை பன்மாகேசுரரட்சை.

சில குறிப்புக்கள்

இவ்வேழு கல்வெட்டுக்களுள் முதல் ஆறு மதுராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுக்களாகும். இம்மதுராந்தக சோழன் ஒன்பதாம் திருமுறையுள் 'மின்னாருருவ மேல்விளங்க' என்று தொடங்கும் கோயிற்பதிகம் பாடியருளிய முதற்கண்டராதித்த சோழ தேவரது அருமைப் புதல்வன்; முதல் இராசராசசோழனது சிறிய தகப்பன்; கி.பி. 970-ஆம் ஆண்டு பட்டமெய்தி கி.பி. 985-வரை நம்சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தவன். இவ்வேந்தனுக்கு உத்தம சோழன் என்ற வேறு பெயரும் உண்டு. அன்றியும், இவனுக்கு விக்கிரமசோழன் என்ற மற்றொரு பெயரும் இருந்திருத்தல் வேண்டும் என்பது இப்போது வெளியிடப்பெற்றுள்ள திருவிசய மங்கைக் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. வேந்தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டாகிய கி.பி. 980க்கு முன்னரே, கோவந்த புத்தூரிலுள்ள