உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

145


சிறந்த வுரைவரைந்த புலவர்பெருமானாகிய பேராசிரியரும் தமது அரியவுரையில், இச்செய்தியைக் கூறினாரில்லை.

இனி, இந்நூலாசிரியர் கடைச்சங்கப்புலவருள் ஒருவராய கல்லாடனாரா? அல்லது அப்பெயரேதரித்துப் பிற்காலத்து விளங்கிய வேறு பெரியோரா? என்பதே ஈண்டு ஆராய வேண்டிய விஷயமாம். இந்நூலுடையார் கடைச்சங்க காலத்து நிகழ்ந்துள்ள சில நிகழ்ச்சிகளைத் தம்நூலில் குறித்திருக் கின்றனர். அவை கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய் மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றைக் கீழே தருகின்றேன்.

”எழுமலையொடித்த கதிரிலைநெடுவேல் வள்ளிதுணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த கறங்குகாலருவிப் பரங்குன்றுடுத்த
பொன்னகர்க்கூடற் சென்னியம்பிறை யோன்
பொதியப்பொருப்பன் மதியக்கருத்தினைக்
கொங்குதேர்வாழ்க்கைச் செந்தமிழ்கூறிப்
பொற்குவைதருமிக் கற்புடனுதவி
என்னுளங்குடிகொண் டிரும்பயனளிக்குங் கள்ளவிழ்குழல்சேர் கருணையெம் பெருமான்”

என்பது ஆலவாயெம்பெருமான் ”கொங்குதேர்வாழ்க்கை”[1] என்னுஞ் செந்தமிழ்ப் பாடலருளித்தருமிக்குப் பொற்கிழியுதவியதை யுரைக்கின்றது.

”உலகியனிறுத்தும் பொருண்மரபொடுங்க மாறனும்புலவரு மயங்குறுகாலை
முந்துறும்பெருமறை முளைந்தருள்வாக்கா லன்பிணைந்திணையென் றதுபதுசூத்திரங்
கடலமுதெடுத்துக் கரையில்வைத்ததுபோற்
பரப்பின்றமிழ்ச்சுவை திரட்டிமற்றவர்க்குத் தெளிதரக்கொடுத்த தென்தமிழ்க்கடவுள்”


  1. கொங்குதேர்வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ்செப்பாது கண்டது மொழிமோ பயிலியதுகெழீ இய நட்பின்மயிலியற் செறியெயிற்றரிவை கூந்தலி னறியவுமுளவோ நீயறியும்பூவே. -குறுந்தொகை