உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

157


மதியும் பகைமுன்னை யாயும் பகைமனை யும்மனைசூழ்
பதியும் பகைபகை யன்றினென் றும்பகை பான்மைதந்த
விதியும் பகையெனிலுமன்ப ரன்பினர் வெள்ளக்கங்கை
பொதியுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே.(33)

பெண்ணமிர் தைப்பார் பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை
வண்ணப் பயலை தணிவித்தி சேல்வம்மின் செம்மனத்துக்
கண்ணப் பனுக்கருள் செய்த சிராமலை யானைக்கண்டு
விண்ணப்பமுஞ் செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே.(37)

காலால் வலஞ்செய்து கையாற் றொழுதுகண் ணாரக்கண்டு
மேலா னவருடன் வீற்றிருப் பானெண்ணில் மெய்ப்புலவீர்
சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப்
பாலா னறுநெய் யொடாடியை பாடிப் பணிமின்களே(39)

பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர்
தணிமின்கள் சீற்றந் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகுநாள்
கணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த
மணிமின்கள் போலொளிர் வான்றோய் சிராப்பள்ளி
வள்ளலுக்கே(40)

இழிவு நரகமு மேலுந் துறக்கமு மிவ்விரண்டும்
பழியு புகழுந் தரவந் தனவினைப் பற்றறுத்துக்
கழியு முடம்பு கழிந்தவர் காணுங் கழலன்கண்டீர்
பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனே.(49)

மருந்தே சிராமலை மாமணி யேமரு தாடமர்ந்தாய்
குருந்தேய் நறம்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரே
முருந்தேய் முறுவ லுமைகண வாமுதல் வாவெனநின்
றிருந்தே நிறையழிந் தேன்வினை யேன்பட்ட வேழைமையே.
(75)

பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த
மெய்யினைக்காத்து வெறுத்தொழிந் தேன்வியன்
                              பொன்மலைமேல்
அய்யனைத் தேவர்தங் கோனையெம் மானையம் மான்மறிசேர்
கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே. (97)