உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


திக்கனை சீத்தித் தக்கன லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடற் சங்கு வொட்ட மகிபாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும்
நித்தி........................மும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசயோத் துங்க வன்ம
னாகிய கடாரத் தரைசனை வாகையம்
பொருகடிற் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமு முத்தொளிர்
புனமணிப் புதவமும்கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் நன்மனை யூரெழிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்விற விலங்கா சோகமும்
காப்பறு நிறைபுனல் மாப்பப் பாலமும்

காவலம் புரிசை மேவுலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத் தக்கோர்புகழ் தலைத்தக் கோலமும்

திதமா வல்விறல் மதமா லிங்கமும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பெருந் தண்டாற் கொண்ட கோப்பரகேசரி

வன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு வது வடகரை ராஜேந்திர சிங்கவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதானம் திருப்புறம்பியத் தாதித் தீஸ்வரமுடைய மஹா தேவர்க்குச் சந்திராதித்தவல் சந்தி விளக்குச் சிறுகாலை அஞ்சும் உச்சியம் போதஞ்சும் எரியக் கடவவாக வைத்த வெண்ணெய் உழக்கு இவ்வெண் ணெய்