உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

||--

66

அப்பாத்துரையம் - 22

'இவ்வகையாகச் சக்கரவர்த்தி மீண்டும் மீண்டும் கண்ணீரும் கம்பலையுமாக வாய்விட்டலறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது இரவு நெடுநேரமாய் விட்டது. விடியுமுன் நான் இச்செய்தியை அரண்மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே போய் வருகிறேன்”

தானும் அழுகையிடையே இவ்வாறு பேசியவண்ணம் அவள் விடைபெற்றுச் சென்றாள்.

மேகங்களற்ற வானவெளியில் தெண்ணிலா மெல்லச் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தது. குளிர்காற்றில் புல்திரள்கள் நடுங்கின. சுவர்க்கோழிகள் விடாது கத்தின. அவ்விடம் விட்டு விரைய மனமில்லாதவளாக அம்பறாத் தூணிச் செல்வரின் புதல்வி தனக்குள்ளாக ஒரு பாடலைப் பாடினாள். ‘சுவர்க்கோழிக் குரலென்ன இடைவிடாமல் சுவறாமல் இரவெல்லாம் வடியும் கண்ணீர்

மாதரசி மறுமொழியாக எதிர்பாடல் பாடினாள்.

பல்கோடிப் பூச்சியினம் குரல் எடுக்கும் பசிய புல்கோடி மீது பொழியும் முகில் நாயகர்தம் செல்கெழுகண் ணீர்த்துளிகள் பனித்துளி களாக!

அரசவைப் பெருமக்கள் 'முகில்நாயகர்கள்' என்று அழைக் கப்படுவதுண்டு என்பதை அவள் இங்கே நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள். மாண்ட சீமாட்டி விட்டுச்சென்ற அரைக் கச்சை, சீப்பு முதலிய சிறு பொருள்கள் சிலவற்றை அவள் தூதணங்கின் கையில் ஒப்படைத்தாள்.

சக்கரவர்த்தியால் மாண்ட சீமாட்டிக்குப் பரிசுகளாக வழங்கப்பட்டவை சில. இப்போது மாண்ட சீமாட்டியின் நினைவூட்டுகளாக அவையே பயன்பட்டன.

சிறுவனான இளவரசனுடயே தாதியராக வந்த நங்கையர் முகங்களும் தேம்பியே இருந்தன. அவை தம் தலைவியின் மறைவுக்காக வருத்தமடைந்ததாகத் தெரியவில்லை - அரண் மனைக்கு அடிக்கடி சென்று ஊடாடும் வாய்ப்பை இழந்து விட்டோமே என்றுதான் அவர்கள் வாட்டமுற்றனர். எப்படியும் தம்மை அரண்மனைக்கே அனுப்பி விடும்படியும் அவர்கள்