உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

'கண்ணுற்ற காலையெலாம் கையின் விரல்வளைத்து

எண்ணுறுங்கால் யான் அடைந்த துன்பங்கள் சான்றாகப் புண்ணுற் றழுங்கும் இந்த ஒற்றைவிரல் போதாது!'

67

இதுகேட்ட அவள் கண்ணீரை ஆறாகப் பெருக்கினாள். 'இன்னும் உங்கள் இதயம் தன் துயரை மட்டுமே விரல் விட்டு எண்ணியமைவதானால், நம் கைகளின் மிக நல்ல பலன் நம் பிரிவிலேயே இருத்தல் உறுதி” என்று நைந்த இழையை முற்றிலும் ஒட்டறுத்தாள்.

'மேலும் சில சொற்களை வீசி எறிந்த பின் நான் அவளை இறுதியாக விட்டகன்றேன். ஆனால், அத்தருணம் கூட எங்கள் தொடர்பு முற்றிலும் ஒழிந்ததென்று

எண்ணவில்லை.

நான்

மனமார

'நாட்கள் பல சென்றன. அவளைப் பற்றிய செய்திகள் எதுவும் என்னை வந்து எட்டவில்லை. இறுதியில் நான் அமைதி யிழந்தேன். ஒரு நாள் இரவு விழா நாளுக்குரிய இசைப் பயிற்சிகள் முடிவுற்றன, நான் அரண்மனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். கடும் பனிமழை பெய்து கொண்டிருந்தது, அரண்மனையிலிருந்து என்னுடன் புறப்பட்டவர்களெல்லாம் தத்தம் வழிகளைப் பின்பற்றி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள். ஆனால், எனக்குத் திட்ட வட்டமான வழி கிடையாது - எங்கே போவதென்று கருத்தே இல்லாமல், நான் நின்ற இடத்திலேயே நின்று தயங்கினேன். ஏனெனில் எனது என்று கூறத் தக்க இடம் எதுவும் எனக்கு எந்தத் திசையிலும் இல்லை. அரண்மனை வளாகத்திலேயே நான் ஓர் அறையை எடுத்து அதில் தங்கியிருந்திருக்கக்கூடும். ஆனால் குடும்ப ஆறுதலற்ற அத்தகைய தனியிடத்தின் மோன அமைதிகளை இச்சமயம் நான் எண்ணிப் பார்க்கவே நடுங்கினேன். இந் நிலையிலே திடுமென அவளைப் பற்றிய எண்ணம் என்னுள் எழுந்தது.

து.

'அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாளோ? இச்சமயம் அவள் தோற்றம் எப்படி இருக்குமோ? என்று நான் துடிதுடிப்புடன் என்னுள் கூறிக்கொண்டேன். அவளை உடனே சென்று காணும் ஆர்வத்துடன் தோள்களில் படிந்த பனித்