உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

73

'பொன்னரளி மலர் ஒன்றைக் கையில் எடுத்து ஏந்திய வண்ணம், அவன் இதே கருத்தை ஒரு பாடலாகவும் வெளி யிட்டான்.

“மயங்கு நின் மாய யாழிசை உலவ, மாமலர் வண்ணங்கள் நிலவ, வயங்கிய இரவில் வானிடை மதியம்

வளர் ஒளி யோடெங்கும் குலவ, நயங்கிளர் உன்றன் மாமனை வாயில் கடந்திடு நல்லடி பதியத்

தயங்கி நின் றிலஈ தென்கொலோ பொழிலின் தள்ளரும் எழிலிடை இழைந்தே!”

அவள் இசையைப் புகழ்ந்த இந்தப் பாடலின் குறைபாட்டைப் பொறுத்தருளும் படி அணங்கினை அவன் வேண்டினான். அத்துடன், “உன் இசையினிமையைப் பருகும் ஆர்வத்துடன் நான் அருகே வந்து நிற்கிறேன். மீண்டும் ஒரு முறை அதே இசையைக் கேட்கும்படி அருள்க” என்று அவன் குறையிரந்தான். மேலும் பல புகழ்ச்சியுரைகளைக் காதலன் கூறிய பின், தன் குரலைப் பின்னும் செயற்கையாக்கிக் கொண்டு மாதரசி பாடினாள்.

“சலசலக்கும் முதுவேனில் தழைகளுடன் இழையக் கலந்திசைக்கும் குழல் தயங்கத் தகுதிபெறும் பாடல்

குலவவலேன் அலேன் எனவே குழையும் என்றன் நெஞ்சம்!”

மேலும் பல வகைக் காதல் விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டனர். வேறு ஐயுறவுகள் எதுவுமில்லாத நிலையில், அணங்கு பதின்மூன்று நரம்புகளையுடைய யாழெடுத்துப் ‘பஞ்சிகி’ மெட்டை மீட்டிக் காலத்தின் புதுமைப்பாணியின்படி விரையார்வத்துடன் விரல்களை ஓட்டினாள். அவள் பாடல் மிக நேர்த்தியாய் இருந்ததென்பதில் ஐயமில்லை. ஆனால், என்னால் அதை நன்கு சுவைத்து மகிழ முடிந்ததென்று கூற இயலாது.

‘ஒருவன் ஏதேனும் அரண்மனை அணங்குடன் அவ்வப்போது ஊடாடி உடனிருப்பதானால், அச்சமயம் இயன்ற அளவு வேறு கவலையற்ற தனி இன்பம் நுகரக்கூடும். தான்