உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

89

'போடி, என்ன வெட்கக் கேட்டிஇது? இவ்வளவு அழகான இளவரசனை இவ்வளவு சின்னஞ்சிறு வயதில் அவனாக விரும்பாத ஒரு சீமாட்டிப் பொம்மையுடன் சென்று கட்டி வைத்திருக்கிறார்களே!' என்றாள் ஒருத்தி.

'இந்த மணவாழ்க்கை பற்றி இளவரசருந்தான் ஒரு சிறிதும் பொருட்படுத்துவதில்லையாமே, இதற்கென்ன சொல்லுகிறாய்?' என்று கேட்டாள் மற்றொருத்தி.

ந்த

அவர்கள் இயல்பாகவே பேசினார்கள். எதையும் குறிப்பாக உள்ளத்தில் கொண்டு பேசவில்லை. ஆனால் தன் நெஞ்சில் நிறைந்து ததும்பி வழியும் செய்தியையே அவர்களும் தங்கள் உள்ளத்தில் கொண்டு பேசுவதாகக் கெஞ்சி எண்ணினான். 'அந்தோ! புஜித் சுபோ சீமாட்டியுடன் உள்ள தன் உறவு அளவு விவாதிக்கப்படத் தொடங்கி விட்டதா? இதை அவர்கள் எவ்வாறு அறிந்திருக்கக்கூடும்?' என்று அவன் சிந்தனை யிட்டான். ஆனால், அடுத்து அவர்கள் பேசிய பேச்சின் போக்கு அவன் ஐயத்தைப் போக்கிற்று. அச்செய்தி பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது கண்டு உற்றுக் கேட்பதைச் சற்று நிறுத்தினான்.ஆனால், அதற்குள் உரத்த குரலில் மீண்டும் பேச்சு

எழுந்தது.

இளவரசன் மொமோஸோனோவின் புதல்வி அசகாவ் இளவரசியிடமும் கெஞ்சி இளவரசன் நட்பாடியிருந்தான். முன்னொரு நாள் அவளுக்கு ஒரு காலை மந்தாரைச் செண்டுடன் ஒரு பாடலையும் அனுப்பியிருந்தான். இப்போது மனையகத்தில் கூடிக் குலவிய பெண்களில் ஒருத்தி அந்தப் பாடலையே பாடிக் காட்டுவது கேட்டு அவன் வியப்படைந்தான். பாடலைத் தவறாகவும் தலை கீழாகவுமே அவள் பாடினாள். அவள் மனைத் தலைவியாகவேயிருக்க வேண்டுமென்று ஊகித்து, அவள் அழகும் அவள் யாப்பிலக்கண அறிவைப் போன்றதாகவே இருந்து விடுமோ என்று அஞ்சினான்.

இச்சமயம் கீ நோ கமி ஒரு விளக்குடன் வந்து அதைச் சுவரில் மாட்டினான். அதை நன்றாகக் கத்திரித்துக் திருத்திய பின் கெஞ்சியிடம் ஒரு பழத் தட்டையளித்தான். ஆனால், கெஞ்சிக்கு இத்தகைய செயல்கள் எதுவும் எழுச்சியூட்டவில்லை. மனைக்குரிய உன் மற்ற உறவினர்களை நான் காண வேண்டாமா?