உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

105

மீண்டும் பல நாட்கள் அவன் தன் அரண்மனையில் கழித்தான். மீண்டும் ஒரு தடவை சனிக்கோளின் நிலை அவனைத் தன் மாளிகைக்கு மீள முடியாமல் தடுத்தது. ஆயினும் போவதாக அவன் புறப்பட்டு, வான்கோள்களின் தடை நிலையை வழி நடுவிலேயே கண்டுகொண்டதாகப் பாவித்தான். இப்போது முன் போல் நடு ஆற்றுமனையில் சென்று தங்கிடம் பெறுவதைத் தவிர வேறு வழியில்லையாயிற்று. கீ நோ கமி இதுகண்டு வியப்புற்றான். ஆனால் இதனால் அவன் மகிழ்ச்சியடையாமலில்லை. ஏனெனில் அவன் மனைப்புறத் தோட்டத்தில் புனைந்தியற்றப்பட்டுள்ள சுனைகள், செய்குளம், கால்வாய்கள் ஆகியவற்றின் அழகில் ஈடுபட்டே கெஞ்சி மீண்டும் வருகை அவாவியதாக அவன் கருதினான்.

நடு ஆற்றுமனைக்குக் காலையில் செல்ல விரும்புவதாகக் கெஞ்சி சிறுவனிடம் கூறியிருந்தான். அவனே இப்போது இளவரசன் அறையில் துணைவனாயிருக்கும்படி அவன் வரவழைக்கப்பட்டான். இதற்கு முன் சிறுவனின் தமக்கைக்குக் கெஞ்சி அனுப்பிய கடிதத்தில், அவன் தன் திட்டத்தை அவளுக்குத் தெரிவித்தும் இருந்தான். இவ்வளவு அரும் பெருஞ்சூழ்ச்சித் திட்டமும், அதைச் சாக்காகக் கொண்டு கெஞ்சி தன் மனைக்கு வருவதே தனக்காகத்தான் என்ற உணர்வும் உத்சுசேமியின் தற்பெருமையைத் தூண்டி அகமகிழ்வூட்டின. ஆயினும் நாம் மேலே கண்டபடி கனவு போன்ற தன் விரைந்த முதற் சந்திப்பில் தான் இளவரசனை மகிழ்வித்த அளவு ஆர்ந்தமர்ந்த அடுத்த சந்தர்ப்பத்தில் மகிழ்விக்க முடியாது என்று எவ்வாறாகவோ அவள் கருதிக் கொண்டிருந்தாள். ஏற்கெனவே அவள் வாழ்க்கை துயரார்ந்ததாய்விட்டது. இளமையின் அவாக்கள் தகர்வுற்றழிந்துவிட்டன. இச் ச்

சுமைகளுடன் மேற்குறிப்பிட்டது போன்ற ஒரு புத்தம் புது ஏமாற்றமும் நேர்ந்துவிடக் கூடாதே என்று அவள் அஞ்சி நடுங்கினாள்.

அவன் வரும்போதே அவனைக் காணும் நிலையில் அவள் அவனை எதிர்பார்த்தபடியே தன் முன்னறையில் இருந்தாள். ஆனால், பெண்மைக்குரிய அவள் தன்மதிப்பு இவ்வாறு அவன் கருதிவிட இடமளிக்க ஒருப்படவில்லை. எனவே சிறுவன், கெஞ்சி அறையில் இருக்கும் சமயம் பார்த்து, அவள் தன்