உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

121

கெஞ்சி இப்போது மயிரிழை அளவிலேயே தப்பினான். 'இத்தகைய பேரிடர்களை ஏற்றும் பெறத்தக்க அவ்வளவு பெரிய காரியமா உத்சுசேமியின் செய்தி?' என்று அவன் எண்ணினான். ஆகவே குதிரைகளைச் சிறுவன் கவனத்தில் விட்டுவிட்டு அவன் தன் மாளிகைக்கே வண்டியை ஓட்டினான்.

மாளிகையில் வந்த பின்னரே சிறுவனிடம் கெஞ்சி முந்திய இரவின் நிகழ்ச்சிகள் முழுவதையும் எடுத்துரைத்தான். 'உன்னால் நேர்ந்த குளறுபடி மிக மிகப் பெரிது' என்று அவன் பையனை மனங்கொண்ட மட்டும் கடிந்து கொண்டான். பின் பையன் செய்தியை நிறுத்திவிட்டு அவன் தமக்கையின் மாய்மாலப் பசப்பைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டான். அந்தக் குழந்தை உள்ளம் இவற்றைக் கேட்டு மனநைந்து உருகிற்று -ஆனால் தன் சார்பிலோ, தமக்கையின் சார்பிலோ எத்தகைய விடை விளக்கம் கூறவும் அவன் வகை காணவில்லை.

6

கெஞ்சி தன்னையும் நொந்து கொள்ளத் தவறவில்லை. ‘ என்னைப்போல அவப்பேறுடையவன் வேறு இருக்க முடியாது. அவள் என்னை மனமார வெறுத்தாலல்லாமல். சென்ற இரவு நடத்தியது போல அவள் என்னை ஒரு போதும் நடத்தியிருக்க முடியாது. இதில் ஐயமில்லை. ஆனால் குறைந்த அளவு அவள் என் கடிதங்களுக்கு நயநாகரிமான மறுப்பாவது எழுதியிருக்க முடியாதா! அந்தோ, நான் எவ்வளவு கீழானவன்! என்னை விட யோ நோ கமி எத்தனையோ உயர்வுடையவன்.!..

தன்னை அவள் வெறுத்து விட்டாள் என்ற எண்ணத்திலேயே அவன் இவ்வாறெல்லாம் புலம்பினான். ஆனால் அதே சமயம் அவள் கைச்சதுக்கத்தை அவன் தன் உள்ளாடையில் மறைத்து அணிந்து கொண்டுதான் இருந்தான். இன்னும் சிறுவனை அவன் தன் அருகே கிடத்திக் கொண்டு, தன் உணர்ச்சிகளை ஆர்வமாக அவன் செவிகளிலேயே கொட்டினான். 'உன்னிடம் எனக்கு எவ்வளவோ பாசம் உண்டு என்பது உனக்குத்தெரியும். ஆயினும் இனிமேல் உன்னைக் காணும் போது என் நெஞ்சில் இந்தப் பெருத்த ஏமாற்றம்தான் முன் வந்து தாண்டவமாடும் இதுவே நம் நட்புத் தொடர்பைத் துண்டித்து விடப்போதுமானது'