உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

127

கொண்டிருந்த சமயம் மஞ்சள் மேலாக்கிட்ட ஒரு சிறுமி சிறிது நாகரிகமாக அமைக்கப்பட்ட சறுக்குத் தட்டிக் கதவு திறந்து கொண்டு கெஞ்சியிடம் வந்தாள். நன்கு நறுமணம் தோய்விக்கப்பட்ட ஒரு வெள்ளை விசிறியை அவனுக்கு அவள் அளித்தாள்: 'இம்மலர்களை வைக்க உங்களுக்கு ஏதேனும் வேண்டாமா? அதற்கு இது உதவட்டும். நீங்கள் வந்து தேர்ந்தெடுக்கும் இந்நாளில் கொத்துகள் குறைவாய் இருக்கின்றனவே என்று மட்டும் தான் வருந்துகிறேன்' என்றாள்.

கெஞ்சி மனையின் வாயில் திறந்து கொண்டு திரும்பி வரும்

வழியில் செவிலித்தாயின் புதல்வனான கோரெமிட்சு மற்ற மனையிலிருந்து வெளிவந்தான். கெஞ்சியை இவ்வளவு நேரம் காக்க வைத்ததற்காக அவன் மிகமிக வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். 'வாயில் கதவின் திறவு கோலை நெடுநேரமாகக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவேதான் நேரமாயிற்று. ஆனால் நல்ல ஆனால் நல்ல காலமாக, காலமாக, இந்த எளிய பகுதியிலுள்ள மக்கள் உங்களை அடையாளமறிந்து கொள்ளமாட்டார்கள். ஆயினும் இந்த அந்தசந்தமற்ற இடுக்குத் தெருவில் நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து அலுப்படைய நேர்ந்ததே என்று வருந்துகிறேன்' என்றான்.

அவன் கெஞ்சியை மனைக்குள் இட்டுச்சென்றான், கோரெமிட்சுவின் உடன் பிறந்தான் மடத்துத் துணைவனா யிருந்தான். அவனும் அவன் மைத்துனன் மிகாவாநோ கமியும் தங்கையும் மனை முன்கூடத்தில் கூடி இளவரசனை வரவேற்றனர். தம் சிறுமனைக்கு அவ்வளவு உயர்ந்த ஒருவர் என்றேனும் வரக்கூடும் என்று கூட அவர்கள் கருதியதில்லை யாதலால், இவ் வெதிர்பாரா வரவில் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.

துறவு மாதாகிய செவிலித்தாய்கூடத் தன் படுக்கையி லிருந்து எழுந்து அவனை வரவேற்றாள். 'உலகப்பற்றை முற்றிலும் துறந்து செல்ல வேண்டுமென்று நான் எத்தனையோ நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு ஆவல் அதைத் தடுத்து வந்திருக்கிறது. செவிலித் தாயாகவே நீ என்னை என்றும் அறிந்து வந்திருக்கிறாய். அந்த நிலையிலேயே ஒரு தடவை நீ என்னைப் பார்க்க வேண்டுமென்று நான்