உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

||--

அப்பாத்துரையம் - 22

கோரெமிட்சு தன் இரகசியத் தொடர்பில் எவ்வளவு கருத்துச் செலுத்தினானோ, அதே அளவு தன் தலைவனின் ஒவ்வொரு அவாவையும் விருப்பத்தையும் நிறைவேற்றுவதிலும் அக்கறை கொண்டான். ஆகவே கெஞ்சி மாய அணங்கை இரகசியமாகச் சந்திக்கும்படி அவன் மறைமுக ஏற்பாடுகள் செய்து வந்தான். இத்திட்டத்தின் நுணுக்க விவரங்களை இங்கே விரித்துரைத்தால் அதுவே பெருங் கதையாகிவிடும். அவற்றை இங்கே முழுதும் வருணிக்காமல் வழக்கப்படி சுருக்கமாகவே கூறுகிறோம்.

-

அவளை என்ன பெயரிட்டு அழைப்பதென்று கெஞ்சி கேட்கவில்லை. அவளுக்கும் தான் இன்னானென்று கூறவில்லை. அவன் எளிய ஆடையுடன் வந்தான் அது மட்டுமல்ல, வழக்கத்துக்கு முற்றிலும் மாறாகக் கால்நடையாக நடந்தே வர முனைந்தான். எத்தகைய முக்கியத்துவமும் அற்ற இந்த அணங்குக்காகக் கெஞ்சி தன்னை இவ்வளவு தாழ்த்திக் கொள்வதைக் கோரெமிட்சு விரும்பவில்லை. குதிரை மீதாவது வரவேண்டுமென்று வலியுறுத்தி, அக்குதிரையின் அருகில் தான் கால் நடையாகவே வந்தான். இதில் அவன் தன்மான உணர்ச்சியையே பேரளவு விட்டுக் கொடுத்தவன் ஆனான். ஏனெனில் அவன் தனித் திட்டத்தின்படி அம் மனையில் உள்ளவர்களிடம் அவன் தன் சுயமதிப்பைப் பேரளவு காத்துக் கொள்ள விரும்பியிருந்தான். கெஞ்சியுடன் நடந்து வருவதனால் இதற்கு மிகவும் ஊறு ஏற்பட வழியிருந்தது. நடந்து வரும் அவனை அம்மனையில் உள்ளவர்கள் மதிக்க முடியாது. ஆனால் நல்ல காலமாகக் கெஞ்சி இச்சமயம் ஒரே ஒரு ஏவலனை மட்டுமே இட்டுக் கொண்டு வந்தான் - முதல் முதல் வெண் மலர்கள் பறிக்க மனையில் புகுந்தவனே அவன். அவன் சிறுவனாதலால், அவனை எவரும் அடையாளம் காணவில்லை. அத்துடன் கெஞ்சி செவிலித்தாயின் இல்லத்துக்கு அவ்வளவு அருகாமையில் வந்த போதிலும், தன் இரகசியத்தைக் காப்பாற்றுவதற்காக அவளைக் கூடச் சென்று பார்க்காமல்

மீண்டான்.

இந்த இரகசிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளால் மாதரசிக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. ஆகவே அவனைப் பற்றிய விவரங்களறிய அவள் பெரு முயற்சிகள் செய்தாள்.