உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146) ||_

அப்பாத்துரையம் - 22

திருந்ததனாலேயே அத்தகைய முகாந்திரம் ஏற்பட்டது. அத்துடன் அவனிடமிருந்து அயலாக வேறெங்காவது அவளுக்கு நயப்பு இருப்பதாக அவன் ஐயுற்றால், அதன் விளைவு மோசமாய் விடுமென்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது.

அன்று எட்டாவது மாதம் பதினைந்தாம் இரவு. நிர் மலமான முழு நிலவின் ஒளி, மோட்டின் பலகைகளிடையே யுள்ள இடைவெளிகளினூடாக அறையெங்கும் பரவிற்று. அவளுக்கு இதுவரை பழக்கமான அறைகளுக்கும் அதற்கும் எவ்வளவோ வேறுபாடு இருந்தது. மச்சின் நாற்புறமும் சுற்றிப் பார்த்துவிட்டு 'நான் இப்போது படுத்திருப்பது என்ன விசித்திரமான இடம்' என்று அவள் கூறிக் கொண்டாள்.

அப்போது கிட்டத்தட்டப் பகலாகி வந்தது. பக்கத்து வீடுகளில் மக்கள் எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டனர். உழவரின் பண்படாத முரட்டுக் குரல்கள் செவிகளில் விழுந்தன. ‘என்ன கடுங்குளிரப்பா இது? இந்த ஆண்டு நாம் பயிர்களில் அதிக வளம் காணப் போவதில்லை' என்றான் ஒருவன். ‘என்னுடைய தெருவிற்பனைத் தொழில் என்ன ஆகுமென்று தெரியவில்லை. நிலைமை பார்வைக்கு மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது' என்றான் மற்றொருவன். மூன்றாவது ஒருவன், பக்கத்து வீட்டுச் சுவர் மீது சாய்ந்து கொண்டு சுவர்கடந்து கூவினான். 'எழுந்திரு, நண்பனே! புறப்பட நேரமாயிற்று. உனக்கென்ன, காது கேட்கிறதா?' என்றான்.

ஒவ்வொருவரும் எழுந்து தம் வயிற்றுப் பிழைப்புக்குரிய ஒவ்வொரு வேலையை நாடி ஒவ்வொரு திசையில் சென்றனர்.

இத்தனை சந்தடியும் இறைச்சலும் மாதரசியின் அமைதியைக் கலைத்து அவளைத் துன்புறுத்தின. அவளைப் போன்ற மென்மையும் நுண்ணயமும் உடைய ஒருத்தி அந்தப் பஞ்சை மனையில் அனுபவித்த இது போன்ற இன்னல்கள் மிகப் பல. இவற்றைப் பொறுப்பதைவிடப் பூமிக்குள் புதைந்து விடுவது எவ்வளவோ மேலானது என்று அவள் கருதுமளவு அது அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் எவ்வளவு துன்பந்தருகிற, வெறுக்கத்தக்க, வேதனை தூண்டத்தக்க செய்திகள் நிகழ்ந்தாலும், அவற்றின் பக்கம் கருத்துச் செலுத்தியதாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை. எவ்வளவு