உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

151

படபடப்பதைப் பார்' என்றான் கெஞ்சி. ஒரு பாடலில் அவன் இக்கருத்தைத் தீட்டிக் காட்டினான். 'உலகு தோன்றியது முதல் காதலின் மடமை நீடித்து இருந்து வந்துள்ளது. ஆயினும் பொழுது விடியுமுன் இப்படி எவரும் முன் பின் யோசியாமல் அறியா நிலம் புகுந்ததில்லை.' என்பது அப்பாடலின் கருத்து.

'ஆனால் உங்களுக்கு இது புதிதாயிரா தென்று நினைக்கிறேன்' என்றாள் அவள். இது கூறு முன் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. அவளும் தன் கருத்தை ஒரு பாடாலாக்கினாள்.

ம்

கருமுகில் திடல்கள் எங்கெப்போது வரும், ஒளி விழுங்கும் என உணராது உருவெழும் வானில் செலவெழும் முழுமதி தரு நிலை என்நிலை, உயர்ந்தே செல்லினும்! பெருமாமுகிலகம் புதைந்து

பிறங்கொளி தடைந்து மறைவுறும் வகையே!

அவள் கிளர்ச்சியுற்று உள்ளூர நடுங்கிக்கொண்டுதான் ருந்தாள். 'சிறு குடில்களிலே நெருங்கி முடங்கி வாழ்ந்த பழக்கத்தினால் இந்த அகன்ற மனை அவளுக்கு அச்ச மூட்டுகிறது போலும்.' என்று அவன் எண்ணிப் புன்முறுவல் கொண்டான். வண்டி உள்ளே சென்ற பின்னும், அவர்களுக்காக ஓர் அறை சுத்தம் செய்யப்படும் வரை அவர்கள் வண்டிக் குள்ளேயே இருந்தனர். வண்டி புறவாரத்தின் கைப்பிடிச்சுவர் அருகிலே நிறுத்தப்பட்டிருந்தது. பணிப்பெண் உகான் இது சமயம் ஒன்றுமறியாதவள் போலத் தோற்றினாலும் அவள் உள்ளம் உண்மையில் தன் தலைவியின் தற்போதைய பயணத்துடன் இதுபோன்ற முந்திய ஒரு பயணத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. அணங்கின் கடைசிக் காதலன் வருகையின் போது மனைக் காவலன் அவனுக்குக் காட்டிய மதிப்பை அவள் கவனித்தாள். அவள் நிலை பற்றி இதற்கேற்பத் தனக்குள்ளாகத் தோழி ஒரு தனி ஊக முடிவு செய்து கொண்டாள்.

பனித்திரை அகலத் தொடங்கிற்று. அவர்கள் வண்டியை விட்டிறங்கித் தமக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட அறைக்குச்